Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும் : 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்

நினைவில் கொள்க.

ஆறு வகையான ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை: கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நீர்.

குவாஷியோர்கர், மராஸ்மஸ் ஆகியவை புரதச் சத்துக் குறைபாட்டு நோய்களாகும்.

மாலைக்கண் நோய், ஸ்கர்வி, ரிக்கட்ஸ், பெரி பெரி ஆகியவை வைட்டமின் குறைபாட்டு நோய்களாகும்.

பாக்டீரியா ஒரு புரோகேரியாட்டிக்  நுண்ணுயிரி

காலரா, டைபாய்டு, நிமோனியா ஆகியவை பாக்டீரியா நோய்களாகும்.

இன்புளுயன்சா, சாதாரண சளி, சின்னம்மை ஆகியவை வைரஸ்  நோய்கள்.


இணையச் செயல்பாடு

சரிவிகித உணவு

விளையாடி பார்ப்போமா... Pyramid game


படிநிலைகள்:

• சரி விகித உணவு பற்றி அறிந்துகொள்வோமா.

• Google தேடு பொறியில் ninindia.org என்று தட்டச்சு செய்யவும்

• முகப்பு பக்கம் தோன்றும்.

.• Pyramid game ஐ சொடுக்கவும்.

• கொடுக்கப்பட்ட பல்வேறு உணவுகளை ஒவ்வொன்றாக இழுத்து pyramid யில் விடவும்


உரலி

http://ninindia.org/Amulya%20Nutrition%20Games/index.html

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்