Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | நினைவில் கொள்க

அணு அமைப்பு | முதல் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 7th Science : Term 1 Unit 4 : Atomic Structure

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : அணு அமைப்பு

நினைவில் கொள்க

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 4 :அணு அமைப்பு : நினைவில் கொள்க

நினைவில் கொள்க

ஒரு தனிமத்தின் வேதிப் பண்புகளை தக்க வைத்துக் கொள்ளத்தக்க மிகச் சிறிய துகளே அணுவாகும். பிற துகள்களுடன் ஒப்பிடும்போது அவை அளவில் சிறியவையாகும்.

அணுக்கள் மிகச் சிறியதாக இருப்பதால் வெறும் கண்களால் மட்டுமல்ல நுண்ணோக்கியினாலும் அவற்றினைக் காண இயலாது.

  ஓர் அணுவில் பெரும்பான்மையான பகுதி வெற்றிடமாகும்.

  ஒரே தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியாகவும், வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் வெவ்வேறு மாதிரியாகவும் உள்ளன.

  ஓர் அணுவில் நேர்மின்சுமை கொண்ட புரோட்டான்களும், மின்சுமையற்ற நியூட்ரான்களும் இணைந்து செறிவான உட்கருவைக் கொண்டிருக்கின்றன.

  புரோட்டான்களும் நியூட்ரான்களும் இணைந்து நியூக்ளியான்கள் என அழைக்கப்படுகின்றன.

  ஓர் அணுவானது மின்சுமையற்றது. அதாவது நடுநிலைத்தன்மை உடையது. அவை சம் எண்ணிக்கையிலான புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன.

  ஓர் அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையே அத்தனிமத்தின் அணு எண்ணாகும். 

ஓர் அணுவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கையே அத்தனிமத்தின் நிறை எண் எனப்படும்.

  ஒரு தனிமம் பிற தனிமங்களுடன் இணையும் திறனே அதன் இணைதிறன் எனப்படும்.



இணையச்செயல்பாடு

அணு அமைப்பு

அணுவை உருவாக்குவோமா!





படிநிலைகள்:

படி 1: கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க. 'play’ பொத்தானை சொடுக்கி செயல்பாட்டினைத் துவங்கவும் 

படி 2: "ATOM" என்பதை சொடுக்கிநாள் புதிய சாளரம் திறக்கும். திரையின் கீழே கூடையில் உள்ள துகள்களை (Protons, Neutrons and Electrons) இழுக்கவும். 

படி 3: வலது சாளரத்தில் உள்ள 'Elements, Net charge and Mass number' போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களை உற்றுநோக்கவும். 

படி 4:  கீழே உள்ள "Symbol" என்பதை சொடுக்கவும். துகள்களை இழுத்து தனிமங்களின் குறியீட்டைப் பெறலாம். 

படி 5:  "GAME" என்பதனை சொடுக்கி விளையாட்டினைத் தொடங்கவும்.



7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : அணு அமைப்பு