Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | பலபடி வேதியியல்

மூன்றாம் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - பலபடி வேதியியல் | 7th Science : Term 3 Unit 3 : Polymer Chemistry

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : பலபடி வேதியியல்

பலபடி வேதியியல்

கற்றல் நோக்கங்கள் * இழைகளின் பல்வேறு வகைகளை மீட்டறிவர் * செயற்கை இழைகளின் பண்புகளை அறியும் பொருட்டுச் செயல்பாடுகளை மேற்கொள்வர் * செயற்கை இழைகளின் நன்மைகளையும் குறைபாடுகளையும் பட்டியலிடுவர் * இளகும் நெகிழிகளை இறுகும் நெகிழிகளில் இருந்து வேறுபடுத்துவர் * ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் பல்வேறு வகையான நெகிழிகளை இனம் கண்டறிவர் * மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் நெகிழிகள் ஏற்படுத்தும் தாக்கத்தினைஉணர்வர் * 5-R தத்துவத்தின் அடிப்படையில் கழிவுகளை அப்புறப்படுத்தும் முறைகளின் பல்வேறு படிநிலைகளை நினைவு கூர்வர் * உயிர் – நெகிழிகள் சார்ந்த சிக்கல்களை ஆராய்வர் * நெகிழிகளை உண்ணும் பாக்டீரியா பற்றிய தகவல்களைச் சேகரிப்பர் * கண்ணாடி ஒரு பலபடி என மீட்டறிவர்

அலகு 3

பலபடி வேதியியல்



கற்றல் நோக்கங்கள்

* இழைகளின் பல்வேறு வகைகளை மீட்டறிவர் 

* செயற்கை இழைகளின் பண்புகளை அறியும் பொருட்டுச் செயல்பாடுகளை மேற்கொள்வர் 

* செயற்கை இழைகளின் நன்மைகளையும் குறைபாடுகளையும் பட்டியலிடுவர் 

* இளகும் நெகிழிகளை இறுகும் நெகிழிகளில் இருந்து வேறுபடுத்துவர்

* ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் பல்வேறு வகையான நெகிழிகளை இனம் கண்டறிவர் 

* மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் நெகிழிகள் ஏற்படுத்தும் தாக்கத்தினைஉணர்வர் 

* 5-R தத்துவத்தின் அடிப்படையில் கழிவுகளை அப்புறப்படுத்தும் முறைகளின் பல்வேறு படிநிலைகளை நினைவு கூர்வர் 

* உயிர் – நெகிழிகள் சார்ந்த சிக்கல்களை ஆராய்வர் 

* நெகிழிகளை உண்ணும் பாக்டீரியா பற்றிய தகவல்களைச் சேகரிப்பர் 

* கண்ணாடி ஒரு பலபடி என மீட்டறிவர்


அறிமுகம்

பலபடி வேதியியல் நம் அன்றாட வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நீங்கள் பயன்படுத்தும் பொருள்களுள் பல பொருள்கள் பலபடி வேதியியலுடன் தொடர்புடையவை. பள்ளி செல்லத் தயாராகும் பொழுது நீங்கள் ஆடைகள் மற்றும் காலணி அணிகிறீர்கள, பல் துலக்குகிறீர்கள், பள்ளிக்கு பை எடுத்துச் செல்கிறீர்கள். இந்தப் பொருள்கள் அனைத்தும் எவற்றால் ஆனது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? இவை அல்லது செயற்கை பலபடி பொருள்களால் ஆன நீண்ட தொடர்கள் இழைகளாகும்.

ஒரு சமுதாயமாக நாம் மென்மேலும் பொருள்களை நுகர்கிறோம். அதிகளவு பொருள்களைப் பயன்படுத்தினால், அதிகளவு கழிவுகளையும் உண்டாக்குகிறோம். முப்பது கழிவுகளுள் பெரும்பான்மையானவை மட்கும் தன்மையானவை அல்லது மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடியவை. ஆனால், இப்பொழுது நாம் வெளியேற்றும் கழிவுகளுள் பெரும்பாலானவை மட்கும் தன்மையற்றவை அல்லது மறுசுழற்சிக்கு உட்படாதவையாக இருப்பதால் சிக்கலான கழிவுகளேயாகும். முற்காலங்களில் வாழ்ந்த மக்கள், பருத்தி, பட்டு மற்றும் சணலால் ஆன இழைகளைப் பயன்படுத்தினர். தற்பொழுது நாம் நெகிழி போன்ற பலவகை செயற்கை இழைகளான பொருள்களைப் பயன்படுத்துகிறோம். இப்பாடத்தில் நாம் பலபடிகள், பல்வேறு வகையான இழைகள், நெகிழிகள் மற்றும் இப்பெருள்களைப் பயன்படுத்துவதால் உண்டாகும் கழிவுகள் மற்றும் அவற்றை மேலாண்மை செய்யும் விதங்கள் பற்றி அறியலாம்.


7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : பலபடி வேதியியல்