Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | இனக்கூட்டம் - வயது பரவல்

உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் - இனக்கூட்டம் - வயது பரவல் | 12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்

இனக்கூட்டம் - வயது பரவல்

இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு குழுவின் வயது விகிதம் (இனப் பெருக்கத்திற்கு முந்தைய வயது, இனப்பெருக்க வயது மற்றும் இனப்பெருக்கத்திற்கு பிந்தைய வயது) அதன் வயதுப் பரவலைக் குறிக்கிறது.

இனக்கூட்டம் - வயது பரவல் (Population age distribution) 

இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு குழுவின் வயது விகிதம் (இனப் பெருக்கத்திற்கு முந்தைய வயது, இனப்பெருக்க வயது மற்றும் இனப்பெருக்கத்திற்கு பிந்தைய வயது) அதன் வயதுப் பரவலைக் குறிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு இனக்கூட்டத்தின் இனப்பெருக்க நிலையைக் நிர்ணயிக்கிறது. இது எதிர்கால இனக்கூட்ட அளவைத் தீர்மானிக்கும் காரணியும் ஆகும்.

பொதுவாக வேகமாக வளரும் இனக்கூட்டத்தில் இளம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும். ஒரு நிலைத்த இனக்கூட்டத்தில் வெவ்வேறு வயதுடைய உயிரினக் குழுக்களின் பரவல் சீராக இருக்கும். இனக்கூட்டத்தின் அளவு குறையும் நிலையில் முதிர்ந்த உயிரினங்கள் அதிகமாகக் காணப்படும் (படம் 11.10). 




அட்டவணை 11.2 தேர்வு செய்த மற்றும் K-தேர்வு செய்த சிற்றினங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள்

உயிரினத் திறன் அல்லது இனப்பெருக்கத் திறன் (r) r-தேர்வு செய்த சிற்றினங்கள்

1. சிறிய அளவிலான உயிரினங்கள்

2. அதிக சேய் உயிரிகளை உருவாக்கும்

3. வேகமாக முதிர்ச்சியடையும்

4. ஆயுட்காலம் குறைவு

5. ஒவ்வொரு உயிரினமும், வாழ்நாளில் ஒரு முறையோ அல்லது சில முறைகளோ மட்டுமே இனப்பெருக்கம் செய்யும்.

6. ஒரு சில உயிரினங்கள் மட்டுமே முதிர்வயதை எட்டும்

7. சுற்றுச்சூழல் நிலையற்றது, அடர்த்தி சாராதது

தாங்கும் திறன் (k) - k-தேர்வு செய்த சிற்றினங்கள் 

1. பெரிய அளவிலான உயிரினங்கள்

2. குறைவான சேய் உயிரிகளை உருவாக்கும்

3. தாமதமான முதிர்ச்சி மற்றும் பெற்றோர் பராமரிப்பு காணப்படும்.

4. ஆயுட்காலம் அதிகம்

5. தன் வாழ்நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இனப்பெருக்கம் செய்யும்.

6. பெரும்பாலான உயிரினங்கள் அதிக வாழ்நாளை எட்டும்.

7. சுற்றுச்சூழல் நிலையானது, அடர்த்தி சார்ந்தது.


12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்