அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - அழுத்தம் | 8th Science : Chapter 2 : Force and Pressure

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்

அழுத்தம்

அழுத்தம் என்ற இயற்பியல் பயன்படுத்தி விசை ஏற்படுத்தும் அளவைப் விளைவை அளக்கலாம். ஒரு பொருளின் ஒரு சதுர மீட்டர் புறப்பரப்பின்மீது செங்குத்தாகச் செயல்படும் விசை அல்லது உந்து விசை 'அழுத்தம்' என் வரையறுக்கப்படுகிறது.

அழுத்தம்

அழுத்தம் என்ற இயற்பியல் பயன்படுத்தி விசை ஏற்படுத்தும் அளவைப் விளைவை அளக்கலாம். ஒரு பொருளின் ஒரு சதுர மீட்டர் புறப்பரப்பின்மீது செங்குத்தாகச் செயல்படும் விசை அல்லது உந்து விசை 'அழுத்தம்' என் வரையறுக்கப்படுகிறது.


அழுத்ததின் SI அலகு பாஸ்கல் (பிரெஞ்ச் அறிவியல் அறிஞர் பிளெய்ஸ் பாஸ்கல் நினைவாக) ஆகும்.

1 பாஸ்கல் = 1 Nm2

விசையால் செலுத்தப்படும் அழுத்தம் விசையின் எண் மதிப்பையும், அது செயல்படுத்தப்படும் தொடுபரப்பையும் சார்ந்து இருக்கும்.


கணக்கீடு 1

ஒரு யானையின் சராசரி எடை 4000 N. அதன் ஒரு பாதத்தின் பரப்பு 0.1 m=. யானையின் ஒரு கால் மூலம் செலுத்தப்படும் அழுத்தத்தைக் கணக்கிடுக.

தீர்வு

யானையின் சராசரி எடை = 4000 N

ஒரு காலின் எடை = ஒரு காலால் செலுத்தப்படும் விசை

= 4000/4 = 1000 N

ஒரு கால் பாதத்தின் பரப்பு = 0.1 m2

அழுத்தம் = விசை / பரப்பு = 1000 / 0.1 = 10000 10' N/m2 = 104Nm2

யானையின் ஒரு காலால் ஒரு சதுர மீட்டர் பரப்பின்மீது செலுத்தப்படும் அழுத்தம் 10,000 நியூட்டன் ஆகும்.

ஒரு பொருளின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதன் மீது செயல்படும் உந்து விசையை அதிகரிக்க வேண்டும் அல்லது உந்து விசை செயல்படும் பரப்பைக் குறைக்க வேண்டும். மிகச்சிறிய பரப்பின்மீது அதிக அழுத்தத்தைச் செலுத்தி அதிக விளைவை ஏற்படுத்துவற்காகவே, கோடாரி, ஆணி, கத்தி, ஊசி, துப்பாக்கிக் குண்டுகள் முதலியன மிகவும் கூர்மையான முனையைக் கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டுகள்

1. அழுத்தத்தைக் குறைக்கவும், சாலையுடனான தொடுபரப்பை அதிகரிக்கவும் கனரக சரக்கு வாகனங்கள் அதிக எண்ணிக்கையிலான சக்கரங்களைக் கொண்டுள்ளன.

2. தோளின் மீது செலுத்தும் அழுத்தத்தைக் குறைக்கவும், தொடுபரப்பை அதிகரிக்கவும் முதுகில் சுமந்து செல்லும் பைகளில் அகலமான பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.


மணலில் நடப்பது நமக்கு கடினமானது. ஆனால் ஒட்டகங்களுக்கு அது மிகவும் எளிதானது. ஏனெனில், ஓட்டகத்தின் அகன்ற பாதங்கள் மணலின் அதிகப்படியான பரப்புடன் தொடர்பு கொள்கின்றன. இதனால் அழுத்தம் குறைந்து மணலில் ஒட்டகம் எளிதாக நடக்கிறது.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்