Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | உரைநடை : விதைத் திருவிழா: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை : விதைத் திருவிழா: கேள்விகள் மற்றும் பதில்கள் | 5th Tamil : Term 2 Chapter 3 : Tholil, vanigam

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்

உரைநடை : விதைத் திருவிழா: கேள்விகள் மற்றும் பதில்கள்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் : உரைநடை : விதைத் திருவிழா: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 

. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. அனுமதி இச்சொல் குறிக்கும் பொருள் ---------

) கட்டளை

) இசைவு

) வழிவிடு

) உரிமை

[விடை : ) இசைவு]

 

2. விளம்பரத்தாள்கள் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

) விளம்பர + தாள்கள்

) விளம்புரத்து + தாள்கள்

) விளம்பரம் + தாள்கள்

) விளம்பு + நாள்கள்

[விடை : ) விளம்பரம் + தாள்கள்]

 

3. ஆலோசித்தல் - இச்சொல்லுக்குரிய பொருள்--

) பேசுதல்

’) படித்தல்

) எழுதுதல்

) சிந்தித்தல்

[விடை : ) சிந்தித்தல்]

 

4. தோட்டம் + கலை இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது-

) தோட்டம்கலை

) தோட்டக்கலை

) தோட்டங்கலை

) தோட்டகலை

[விடை : ) தோட்டக்கலை]

 

5. பழங்காலம் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

) பழைய காலம்

) பிற்காலம்

) புதிய காலம்

) இடைக்காலம்

[விடை : ) புதிய காலம்]

 

. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.

) வழிபாடு + கூட்டம்வழிப்பாட்டுகூட்டம்

) வீடு + தோட்டம்வீட்டுத்தோட்டம்

 

. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

) அழைப்பிதழ்அழைப்பு + இதழ்

) விதைத்திருவிழாவிதை + திருவிழா

 

. கோடிட்ட இடத்தை நிரப்புக

) விதைத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளின் எண்ணிக்கை 27 அரங்குகள்

) விதைகள் தரம் ஆனவையாக இருத்தல் வேண்டும்.

) கொண்டைக்கடலை என்பது, நவதானியங்களுள்  ஒன்று

 

. வினாக்களுக்கு விடையளிக்க,

1. மாணவர்களை எங்கே அழைத்துச் செல்வதாகத் தலைமையாசிரியர் கூறினார்?

விடை

மாணவர்களை அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விதைத் திருவிழாவிற்கு அடுத்த வாரம் அழைத்து செல்வதாகத் தலைமையாசிரியர் கூறினார்

 

2. ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் என்ன செய்தி இருந்தது?

விடை

ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் இருந்த செய்தி விதைத்திருவிழா தொடர்பான செய்தி' ஆகும்.

 

3. ‘பாதிப்பு' என்று எழுதப்பட்ட அரங்கத்தில் என்ன செய்தி சொல்லப்பட்டது?

விடை

இரசாயன விதைகள், இரசாயனப் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைத்தாம் 'பாதிப்பு' என்று சொல்கிறார்கள். இதனால், மண்ணின் தன்மை கெடுகிறது. இதனைக் தடுக்கும் வகையில் இயற்கை முறையில் வேளாண்மை செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.

 

4. நவதானியங்களுள் ஐந்தின் பெயரை எழுதுக.

விடை

கொண்டைக்கடலை

தட்டைப்பயறு

மொச்சை

பாசிப்பயறு

கோதுமை.

 

. சிந்தனை வினாக்கள்.

1. செயற்கை உரங்கள், மண்ணின் வளத்தைக் கெடுக்கும் எனில், அதற்கு மாற்றாக நாம் என்ன செய்யலாம்?

விடை

செயற்கை உரங்கள், மண்ணன் வளத்தைக் கெடுக்கும் எனில், அதற்கு மாற்றாக நாம் செய்ய வேண்டுவன:

இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மண்புழு வளர்த்தல்.

கால்நடைகள் வளர்த்து அவற்றின் சாணங்களை எருவாக்குதல்.

அவுரிச் செடிகளை வளர்த்து வயலுக்கு எருவாக்குதல்.

 

 

கற்பவை கற்றபின்


இயற்கை வேளாண்மையின் சிறப்புகளைப் பற்றி, வழிபாட்டுக்கூட்டத்தில் பேசுக.

இயற்கை உணவுப்பொருள்களின் படங்களைத் திரட்டித் தொகுப்பேடு உருவாக்குக..

'இயற்கை உரம் பயன்படுத்துவோம். இனிமையாய் வாழ்வோம்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள இயற்கை விதைப் பண்ணைகளுக்குச் சென்று, செய்தி திரட்டுக.

உங்கள் பள்ளியில் நடைபெறும் ஏதேனும் ஒரு விழாவுக்கு மாதிரி அழைப்பிதழ்/ துண்டு விளம்பரம் உருவாக்கி மகிழ்க.

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்