Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | புரதச்சத்துக் குறைபாட்டு நோய்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

புரதச்சத்துக் குறைபாட்டு நோய்கள்

நம் தினசரி உணவில் சில ஊட்டச்சத்துக்கள் நீண்ட காலம் இல்லாமல் போவதால் குறைபாட்டு நோய்கள் தோன்றுகின்றன. இந்த நிலை 'ஊட்டச்சத்து குறைபாடு' என்று குறிக்கப்படுகிறது.

புரதச்சத்துக் குறைபாட்டு நோய்கள்

நம் தினசரி உணவில் சில ஊட்டச்சத்துக்கள் நீண்ட காலம் இல்லாமல் போவதால் குறைபாட்டு நோய்கள் தோன்றுகின்றன. இந்த நிலை 'ஊட்டச்சத்து குறைபாடு' என்று குறிக்கப்படுகிறது. புரதக் குறைபாடு மற்றும் ஆற்றல் குறைபாட்டால் குவாசியோர்கர் (Kwashiorkar) மற்றும் மராஸ்மஸ் (Marasmus) போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

 குவாசியோர்கர்: அதிகப்படியான புரதக் குறைபாட்டால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளைத் தாக்குகிறது. இக்குழந்தைகளின் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமாகக் காணப்படும். ஆனால் புரதங்கள் மிக மிகக் குறைந்த அளவே காணப்படும்.

மராஸ்மஸ்: இந்த நோய் பொதுவாக ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளங் குழந்தைகளைத் தாக்குகிறது. இந்த வயதில் இவர்களுடைய உணவில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படும்.


9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்