வெப்பம் மற்றும் வெப்பநிலை | இரண்டாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 7th Science : Term 2 Unit 1 : Heat and Temperature

7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : வெப்பம் மற்றும் வெப்பநிலை

வினா விடை

7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 :வெப்பம் மற்றும் வெப்பநிலை: புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு 

1. வெப்பநிலையினை அளப்பதற்கான S.I அலகுமுறை __________ 

அ) கெல்வின் 

ஆ) பாரன்ஹீட் 

இ) செல்சியஸ் 

ஈ) ஜூல்

விடை : அ) கெல்வின் 


2. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம் 

அ) விரிவடைகிறது

ஆ) சுருங்குகிறது 

இ) அதே நிலையில் உள்ளது

ஈ) மேற்கூறிய ஏதுமில்லை

விடை : அ) விரிவடைகிறது 


3. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை 

அ) 0°C 

ஆ) 37°C 

இ) 98°C 

ஈ) 100°C

விடை : ஆ) 37°C 


4. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது __________ 

அ) பாதுகாப்பான திரவம்

ஆ) தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது 

இ) ஒரே சீராக விரிவடையக்கூடியது 

ஈ) விலை மலிவானது

விடை : இ) ஒரே சீராக விரிவடையக்கூடியது 


5. கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K (கெல்வின்) = °C (செல்சியஸ்) + 273.15

       0C        K

அ. -273.15    0

ஆ. -123    +150.15

இ. +127    +400.15

ஈ. +450    +733.15 

விடை : இ) +127 +400.15 


II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. மருத்துவர்கள் __________ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி மனிதனின் உடல் வெப்பநிலையினை அளவிடுகின்றனர்.

விடை : மருத்துவ 

2. அறைவெப்ப நிலையில் பாதரசம் __________ நிலையில் காணப்படுகிறது.

விடை : திரவ 

3. வெப்பஆற்றலானது __________ பொருளில் இருந்து __________ பொருளுக்கு மாறுகிறது. 

விடை : உயர் வெப்பநிலையில் உள்ள, குறைந்த வெப்பநிலையிலுள்ள

4. -7°C வெப்பநிலையானது 0°C வெப்பநிலையினை விட __________

விடை : குறைவு 

5. பொதுவாக பயன்படுத்தப்படும் ஆய்வக வெப்பநிலைமானி __________ வெப்பநிலைமானி ஆகும்.

விடை : திரவ கண்ணாடி (அ) பைமெட்டாலிக் துண்டு


III. பொருத்துக 

1. மருத்துவ வெப்பநிலைமானி – அ. ஆற்றல் 

2. சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை – ஆ. 100o

3. வெப்பம் – இ. 37oC

4. நீரின் கொதிநிலை – ஈ. 0oC

5. நீரின் உறைநிலை – உ. உதறுதல் 

விடைகள் :

1. மருத்துவ வெப்பநிலைமானி – உ. உதறுதல்

2. சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை – இ. 37oC

3. வெப்பம் – அ. ஆற்றல் 

4. நீரின் கொதிநிலை – ஆ. 100o

5. நீரின் உறைநிலை – ஈ. 0oC



IV. மிகக் குறுகிய விடையளி 

1. ஸ்ரீநகரின் (ஜம்மு & காஷ்மீர்) வெப்பநிலை -4°C மேலும் கொடைக்கானலின் வெப்பநிலை 3°C இவற்றில் எப்பகுதியின் வெப்பநிலை அதிகமாகும். அப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு எவ்வளவு? 

• கொடைக்கானலின் வெப்பநிலை அதிகம் ஆகும் 

• இருப்பகுதிகளுக்கும் இடையேக் காணப்படும் வெப்பநிலை வேறுபாடு

7°C (3°C - (-4°C) = 3+4) ஆகும். 


2. ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா? ஏன்? 

• தவறு 

• ஏனெனில் மருத்துவ வெப்பநிலைமானியைக் கொண்டு உடலின் வெப்பநிலையை மட்டுமே அளவிட முடியும். 

• ஆய்வக வெப்பநிலைமானியை பயன்படுத்தி சூடான நீரின் வெப்பநிலையினைக் கண்டறியலாம். 


3. நம்மால் ஏன் மருத்துவ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது? 

• மருத்துவ வெப்பநிலைமானியைக் கொண்டு ஒருவரின் உடல் வெப்பநிலையை மட்டுமே அளவிட முடியும். எனவே காற்றின் வெப்பநிலையினை அளக்க முடியாது. 

• மருத்துவ வெப்பநிலைமானியை காற்றில் வைக்கும் போது அதனுடைய வெப்பநிலையானது உயரவோ அல்லது குறையவோ கூடும். மேலும் அப்படியே பயன்படுத்தும் போது நோயாளியின் உடல் வெப்பநிலையினை தவறாகக் காட்ட நேரிடும். 

• பாதரசத்தின் அதிகமான விரிவினால் உருவாகும் அழுத்தத்தின் காரணமாக வெப்பநிலைமானியானது உடைந்துவிடக்கூடும். 


4. மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது? 

• குறுகிய வளைவானது வெப்பநிலைமானியை நோயாளியின் வாயிலிருந்து எடுத்தவுடன் பாதரசமானது மீண்டும் குமிழுக்குள் செல்வதைத் தடுக்கிறது.

• இதனால் நோயாளியின் வெப்பநிலையை சரியாக குறித்துக்கொள்ள இயலும். 


5. மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும்முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது? 

• வெப்பநிலைமானியை உதறும்போது அதிலுள்ள பாதரசமானது கீழ்மட்டத்திற்கு இறங்கும். 

• பாதரச மட்டமானது 35°C [95°F] கீழ் உள்ளதா என உறுதிசெய்தபின் வெப்பநிலையினைக் கண்டறியவும்.



V. குறுகிய விடையளி

1. வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்? பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா? அவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை? 

• அறை வெப்ப நிலையில் திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம் பாதரசமாகும். 

• மேலும் வெப்பதால் எளிதில் விரிவடையக்கூடியது. 

• பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலாது. 


2. சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள். நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும். 

• ரமணியின் கூற்று சரியானது ஆகும். 

• ஆய்வக வெப்பநிலைமானியில், கீழ்ப்பகுதியில் கிங்க் எனப்படும் வளைவான பகுதி எனவே சுவாதி ஆய்வக வெப்பநிலை மானியை சூடான நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் வெப்பநிலைமானியின் அளவீடானது கீழே சென்று குறைய நேரிடும். 

• எனவே ஆய்வக வெப்பநிலைமானியை பயன்படுத்தும் போது சூடான நீரின் உள்ளே வைத்து அளவினை குறிக்க வேண்டும் கண்டிப்பாக வெப்பநிலைமானியை வெளியே எடுக்கக் கூடாது. 


3. இராமுவின் உடல் வெப்பநிலை 99°F. அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? ஏன்? 

• 99°F என்பதை காய்ச்சலாக கருத முடியாது என்பதால் இராமு காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை. 

பொதுவாக மனிதரில் காணப்படும் சாதாரண உடல் வெப்பநிலையானது 97°F முதல் 99°F ஆகும். 

• மேலும் குழந்தைக்கு சற்று கூடுதலாக வெப்பநிலையானது 97°.9°F முதல் 100.4°F வரை இருக்கும்.



VI. விரிவான விடையளி 

1. மருத்துவ வெப்பநிலைமானியின் படம் வரைந்து அதன் பாகங்களை குறிக்கவும்.




2. ஆய்வக வெப்பநிலைமானிக்கும், மருத்துவ வெப்பநிலைமானிக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை? 


மருத்துவ வெப்பநிலைமானி.

1. 35°C முதல் 42°C வரை அல்லது 94°F முதல் 108°F வரை அளவீடுகளை கொண்டது

2. பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்காது

3. கைகளுக்கு அடியில் இருந்தோ அல்லது வாயிலிருந்தோ வெப்பநிலைமானியினை எடுத்த பிறகு அளவீடானது எடுக்கப்படுகிறது.

4. பாதரசத்தினை கீழே கொண்டுவர வெப்பநிலை மானியினை உதற வேண்டும்.

5. இது உடல் வெப்பநிலையினை அளக்க அயன்படுகிறது.

ஆய்வக வெப்பநிலைமானி

1. பொதுவாக -10°C முதல் 110oC வரை அளவீடுகளை கொண்டது

2. பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்கிவிடும்.

3. வெப்பநிலைமானியானது வெப்ப மூலத்தில் இருக்கும் நிலையிலேயே அளவீடானது எடுக்கப்படுகிறது.

4. பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வர வெப்பநிலைமானியினை உதற வேண்டியதில்லை

5. இது ஆய்வகத்தில் பல்வேறு பொருள்களின் வெப்பநிலையை அளக்க பயன்படுகிறது.


VII. உயர் சிந்தனை வினாக்கள் 

1. செல்சியஸ் மதிப்பினை போன்று இரு மடங்கு மதிப்பு கொண்ட பாரன்ஹீட் வெப்பநிலையின் மதிப்பு யாது? 

வெப்பநிலை என்பது 320°

தீர்வு :

பாரன்ஹீட் F = 2C --------- (1)

செல்சியஸ் C = C ---------- (2)

F = (9 / 5) C + 32

2C = (9 / 5) C + 32

2C – (9 / 5) C = 32

(10C – 9C) / 5 = 32

C = 160°

F = 2C = 2 × 160° = 320°


2. கால்நடை மருத்துவரை சந்தித்து வீட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் சராசரி உடல் வெப்பநிலையினை கண்டறியவும். 





7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : வெப்பம் மற்றும் வெப்பநிலை