Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | வெப்பநிலைமானி

வெப்பம் மற்றும் வெப்பநிலை | இரண்டாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பநிலைமானி | 7th Science : Term 2 Unit 1 : Heat and Temperature

7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : வெப்பம் மற்றும் வெப்பநிலை

வெப்பநிலைமானி

வெப்பநிலையினை அளக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவி வெப்பநிலைமானியாகும்.

வெப்பநிலைமானி

வெப்பநிலையினை அளக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவி வெப்பநிலைமானியாகும்.

பல வகையான வெப்ப நிலை மானிகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில வெப்பநிலைமானிகள் குறிப்பிட்ட வகை திரவம் நிரப்பப்பட்ட மெல்லிய கண்ணாடி குழலினைக் கொண்டுள்ளன.

ஏன் பாதரசம் அல்லது ஆல்கஹால் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப் படுகின்றது?

பெரும்பாலும் பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலைமானிகளில் பயன்படுகின்றன. ஏனெனில் அவற்றின் வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அவை திரவ நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகின்றன. மேலும் சிறிய அளவில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடும் அத்திரவங்களின் கனஅளவில் மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

வெப்பநிலைமானியில் உள்ள திரவங்களின் கனஅளவில் ஏற்படும் இம்மாற்றத்தினை அளப்பதன் மூலம் நாம் வெப்பநிலையினை அளவிடுகிறோம்



செயல்பாடு : 2

தேவையான பொருள்கள்

பெரிய கண்ணாடி பாட்டில், பலூன், நூல். மெழுகுவர்த்தி, நீர், தாங்கி 


செய்முறை

ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலினை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு நீரினால் நிரப்பவும்.

பாட்டிலின் வாய்ப்பகுதியில் பலூனை பொருத்தி அதனை நூலினைக் கொண்டு இறுக பிணைக்கவும். பாட்டிலை தாங்கியில் பொருத்தி மெழுகுவர்த்தியின் உதவியினால் வெப்பப்படுத்தவும். மாற்றங்களை உற்று நோக்கவும். 

காண்பவை

வாயுக்களை வெப்பப்படுத்தும்போது அவை விரிவடைகின்றன. குளிர்ச்சி அடையச்செய்யும்போது அவை சுருங்குகின்றன.

கோடைக்காலங்களில் வாகனங்களின் டயர்கள் வெடிப்பது ஏன்?

கோடையில் அதிக வெப்பம் இருப்பதால் டயரில் காற்று அதிகமாக விரிவடையும். விரிவடைந்த காற்றினால் ஏற்படும் அழுத்தம் காரணமாக டயர் வெடிக்கிறது.

வெப்பப்படுத்தியபிறகு பலூனில் ஏற்படும் மாற்றம் யாது ? ஏன்?

ஏனெனில் பாட்டிலில் உள்ள காற்று வெப்பத்தால் விரிவடைகிறது.

இப்போது பாட்டிலினை குளிரவிடவும். பாட்டில் குளிர தொடங்கியவுடன் பலூனில் ஏற்படும் மாற்றம் யாது? ஏன்?

பலூன் அளவு சுருங்கி கீழே மடிகிறது.


பாதரசத்தின் பண்புகள் 

* பாதரசம் சீராக விரிவடைகிறது. (ஒரே அளவு வெப்ப மாற்றத்திற்கு அதன் நீளத்தில் ஏற்படும் மாற்றமும் ஒரே அளவுடையதாக இருக்கிறது.)

* இது ஒளி ஊடுருவாதது மற்றும், பளபளப்பானது. 

* இது கண்ணாடி குழாயின் சுவர்களில்ஒட்டாது. 

* இது வெப்பத்தினை நன்கு கடத்தக்கூடியது.

* இது அதிக கொதிநிலையும் (357°C) குறைந்த உறைநிலையும் (-39°C) கொண்டது. எனவே அதிக நெடுக்கத்தினாலான வெப்பநிலைகளை அளக்க பாதரசம் பயன்படுகிறது. 


ஆல்கஹாலின் பண்புகள்

* ஆல்கஹால் -100°C க்கும் குறைவான உறைநிலையை கொண்டுள்ளது. எனவே மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படுகிறது.

* ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்விற்கு இதன் விரிவடையும் தன்மை அதிகமாகும். 

* இதனை அதிக அளவிற்கு வண்ணமூட்ட முடியும். ஆதலால், கண்ணாடி குழாய்க்குள் இத்திரவத்தினை தெளிவாக காண இயலும். 










7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : வெப்பம் மற்றும் வெப்பநிலை