Home | 4 ஆம் வகுப்பு | 4வது அறிவியல் | கேள்விகள் மற்றும் பதில்கள்

தாவரங்கள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு அறிவியல் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Science : Term 2 Unit 3 : Plants

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : தாவரங்கள்

கேள்விகள் மற்றும் பதில்கள்

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : தாவரங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், மதிப்பீடு, சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடத்தை நிரப்புக, சரியா அல்லது தவறா எனக் கூறுக, பொருந்தாத ஒன்றை வட்டமிடு, பொருத்துக, சுருக்கமாக விடையளி, விரிவாக விடையளி, உயர் சிந்தனை வினாக்கள்.

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இலையின் முனைப்பகுதி ---------------- ஆகும்.

. இலைத்தாள்

. இலை நுனி

மைய நரம்பு

. நரம்புகள்

[விடை : . இலை நுனி]

 

2. பின்வருவனவற்றுள் எது முதன்மை உற்பத்தியாளர்?

. தாவரம்

. விலங்கு

. மனிதன்

. மேற்கூறிய எதுவும் இல்லை

[விடை : . தாவரம்]

 

3. குளிர்காலத்தில் மட்டுமே மலரும் மலர் எது?

) மல்லிகை

) மணிப்பூ

) டிசம்பர் பூ

) கனகாம்பரம்

[விடை : ) டிசம்பர் பூ]

 

4. அலங்காரத் தாவரத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

. பார்த்தீனியம்

. மாங்காய்

. விசிறி வாழை

. நிலக்கடலை

[விடை : . விசிறி வாழை]

 

5. பின்வருவனவற்றுள் எந்தத் தாவரத்தின் மலர் உண்ணக் கூடியது?

. காலிபிளவர்

. புதினா

. உருளைக்கிழங்கு

. முட்டைக்கோஸ்

[விடை : . காலிபிளவர்]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒளிச்சேர்க்கையின் போது --------- உற்பத்தி செய்யப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது.

விடை : உணவு

2. பசுந்தாவரங்கள் ---------- எனும் நிறமியைக் கொண்டுள்ளன.

விடை : பச்சையம்

3. வெங்காயம் தாவரத்தின் ---------- பகுதியாகும்.

விடை : தண்டுப்

4. மலரின் ஆண் பகுதி --------------- ஆகும்.

விடை : மகரந்தம்

5. உணவாகப் பயன்படும் விதைக்கு ஓர் எடுத்துக்காட்டு -------------

விடை : அரிசி

 

III. ஓரிரு வார்த்தையில் விடையளி.

1. தாவரத்தின் பெண் பகுதி எது?

விடை : சூலகம்

2. உணவாகப் பயன்படும் ஏதேனும் ஓர் இலையின் பெயரை எழுதுக.

விடை : கொத்தமல்லி

3. உணவில் நறுமணப் பொருளாகப் பயன்படும் பூ எது?

விடை : கிராம்பு

4. தானியங்களில் காணப்படும் சத்துகள் யாவை?

விடை : கார்போஹைட்ரேட், புரதங்கள்.

5. கோடை காலத்தில் பூக்கும் மலர்களுள் ஏதேனும் ஒன்றின் பெயரை எழுதுக.

விடை : ரோஜா

 

IV. சுருக்கமாக விடையளி.

1. இலையின் பாகங்களை எழுதுக.

விடை:

இலைத்தாள், இலை நுனி, மைய நரம்பு, நரம்புகள், இலைக்காம்பு.

 

2. ஒளிச்சேர்க்கை - வரையறு.

விடை:

ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையம் (குளோரோபில்), நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் ஒரு செயல்முறையாகும்.

 

3. அயல் தாவரங்களின் பெயர்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.

விடை:

சைக்கஸ், பெரணி, குரோட்டன்ஸ், விசிறி வாழை, படகு அல்லி, கற்றாழை.

 

4. நிலத்திற்கு அடியில் காணப்படும் எவையேனும் இரு தண்டுகளின் பெயர்களை எழுதுக.

விடை:

இஞ்சி, உருளைக் கிழங்கு.

 

5. நாம் ஏன் பார்த்தீனியம் தாவரத்தைத் தொடக்கூடாது?

விடை:

இத்தாவரத்தின் மகரந்தத் துகள்கள் இயற்கையிலேயே ஒவ்வாமை கொண்டவை. ஆகையால் இவ்வகைச் செடியைத் தொடாமல் இருப்பது நல்லது.

 

V. விரிவாக விடையளி.

1. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எவையேனும் நான்கு பாகங்களைக் குறித்து அவற்றை விளக்குக.


விடை:


இலைத்தாள் : இது இலை யின் பரந்த தட்டையான பகுதியாகும் (லாமினா).

இலைநுனி : இது இலை யின் முனைப் பகுதியாகும்.

மைய நரம்பு : இலையின் நடுவில் மைய நரம்பு செல்கிறது.

நரம்புகள் : இலை நரம்புகள் மைய நரம்பிலிருந்து கிளைகளாகப் பிரிகின்றன. அவை நீர் மற்றும் தாதுக்களைக் கொண்டு செல்லும் வெற்றுக்குழாய்கள் ஆகும். .

இலைக்காம்பு : இலைக்காம்பானது இலையை முதன்மைத் தண்டுப் பகுதியுடன் இணைக்கிறது.


2. மலரின் படம் வரைந்து அதன் பாகங்களை விவரி.

விடை:


அல்லிவட்டம் : அல்லி வட்டம் பிரகாசமான நிறமுடைய மலரின் அடுக்கு ஆகும். தேனீக்கள் அல்லது வண்ணத்துப்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களை ஈர்ப்பதே தேன் முக்கிய பணியாகும். பூச்சிகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

மகரந்தத்தாள் வட்டம்: மகரந்தத்தாள் வட்டம் மலரின் மையத்தில் காணப்படுகின்றது. இதில் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தத் துகள்கள் உள்ளன. இது மலரின் ஆண் பாகமாகும்.

சூலகம்: மலரின் நடுப்பகுதியில் காணப்படுகிறது. சூலகம் மகரந்தத் துகள்களுடன் இணைந்து கனியாக மாறுகிறது. இது மலரின் பெண் பாகமாகும்.


VI. செயல்திட்டம்,

1. உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு தாவரங்களின் உண்ணக்கூடிய பாகங்களைச் சேகரித்து, அவற்றை உங்களது வகுப்பறையில் காட்சிப்படுத்தவும்.

2. மலர்கள் சிலவற்றைச் சேகரித்து அவற்றின் பாகங்கள் குறித்து உங்களது நண்பர்களுடன் கலந்துரையாடவும்.


சிந்தித்து விடையளி

 எப்பகுதி வழியாக கார்பன் டைஆக்சைடு இலையினுள் செல்கிறது?

விடைஇலைத்துளைகள்.

 இலையின் எப்பகுதி நீரை எடுத்துச் செல்கிறது?

விடைஇலை நரம்புகள்


சிந்தித்து விடையளி

தாவரங்கள் இல்லாமல் உயிரினங்களால் ஏன் உயிர் வாழ முடியாது?

விடையளிப்போம்

அடைப்புக் குறியில் உள்ள எழுத்துகளை ஒழுங்குபடுத்திகோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் வெளியிடுவது. (ன்சி ஆஜக்)

விடைஆக்சிஜன்

2. முதல் நிலை உற்பத்தியாளர் என்பது(ம்ரவதா)

விடைதாவரம்

3. இலைத்துளைகள் இலையின் ___________ பகுதியில் காணப்படுகின்றன (டிஅ).

விடைஅடி

4. உணவு தயாரித்தலில் ஈடுபடும் நிறமி. ___________ பகுதியில் காணப்படுகின்றன (சைம்ச்பய).

விடைபச்சையம்

செய்து கற்போம்

இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளுங்கள்ஒன்றைசூரிய ஒளி படும்படியாகவும்மற்றொன்றை சூரிய ஒளி படாமல் முழுமையாக மூடப்பட்ட பெட்டியிலும் வைக்கவும்இரண்டிலும் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வாருங்கள்ஒரு வாரம் சென்ற பிறகு இரு தொட்டிச் செடிகளையும் உற்று நோக்குங்கள்.

செய்து கற்போம்

உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்களைப் பட்டியலிடுக.


செய்து கற்போம்

பச்சையமற்ற தாவரங்கள் காணப்படும் இடங்களைப் பட்டியலிடுக.

விடை:

அழுகிய மரக்கட்டைஈரமான ரொட்டிவிழுந்து கிடக்கும் மரங்கள்அழுகிய உணவுப் பொருள்கள்.விடையளிப்போம்

விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ---------- ஒரு பூவாத் தாவரமாகும்.

விடைபெரணி

2. தாவரங்கள் ------- மற்றும் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

விடைமலர்

3. ---------- தாவரங்கள் வாழ்வதற்கும் அவற்றின் உணவைப் பெறுவதற்கும் பிற உயிரினங்களைச் சார்ந்துள்ளன.

விடைபச்சையமற்ற

4. ஆட்டோட்ரோப் தாவரங்கள் -----------, ----------- மற்றும் பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்திதமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்கின்றன.

விடைகாற்றுசூரிய ஒளி


விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. புல்லிவட்டமானது மலர் மொட்டாக இருக்கும் போது அதனைப்பாதுகாக்கிறது

2. மகரந்தத்தாள் வட்டத்தில் மகரந்தத் துகள்கள் உள்ளன.

3. சூலகம் என்பது மலரின் பெண் பகுதியாகும்.

செய்து கற்போம்

ஆசிரியர்களுக்கான குறிப்பு

சில செம்பருத்திப் பூக்களை வகுப்பறைக்குக் கொண்டு வாருங்கள்அவற்றை மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் கொடுக்கவும்அவற்றைக் கொண்டு மலரின் பாகங்களை அறிமுகப்படுத்துங்கள்அவர்கள் உற்றுநோக்கி உணர்ந்தபின் மலரின் பாகங்கள் குறித்து அவர்கள் கூறுவதைப் பதிவிடச் சொல்லுங்கள்.

மலரின் பாகங்கள் நிறம்


சிந்தித்து விடையளி

நான்கு பருவ காலங்களின் பெயர்கள் உனக்குத் தெரியுமா?

விடை : வசந்த காலம்கோடைக்காலம்இலையுதிர் காலம்குளிர்காலம்


மேலும் அறிந்து கொள்வோம்

கனகாம்பரம் அனைத்துப் பருவங்களிலும் மலரும்


குறிஞ்சிப் பூ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும்

விடையளிப்போம் 

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.

1. டிசம்பர் பூ, சம்பங்கி பூ, மணிப்பூ (டியூனிப்)

விடை : சம்பங்கி பூ

2. குங்குமப்பூடாலியா, ரோஜா

விடை : ரோஜா

3. ரோஜா, படகு அல்லி, குரோட்டன்ஸ்

விடை : ரோஜா

செய்து கற்போம்

பல்வேறு அலங்காரத் தாவரங்களைச் சேகரித்து உங்கள் பள்ளித் தோட்டத்திலோ அல்லது வீட்டிலோ வளர்க்கவும்.

விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மலர் உணவாகப் பயன்படுகின்றது.

2. உருளைக்கிழங்கின் -------- பகுதி உணவாகப் பயன்படுகிறது.

3. ------- தாவரம் தண்டுகளில் உணவைச் சேமிக்கின்றது.

4. விதைகளில் ---------- மற்றும் --------- போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

செய்து கற்போம்

தாவரத்தின் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது என்பதை அறிந்து அட்டவணையை நிரப்புக.

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : தாவரங்கள்