Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | மெய் மற்றும் மாயபிம்பம்

ஒளியியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மெய் மற்றும் மாயபிம்பம் | 7th Science : Term 3 Unit 1 : Light

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : ஒளியியல்

மெய் மற்றும் மாயபிம்பம்

ஊசித்துளைக் காமிரா மற்றும் ஆடியில் தோன்றும் பிம்பங்களைப் பார்த்தோம். இவ்விரண்டிலும் தோன்றிய பிம்பங்களுக்கு இடையேயான வேறுபாடு என்ன?

மெய் மற்றும் மாயபிம்பம்

ஊசித்துளைக் காமிரா மற்றும் ஆடியில் தோன்றும் பிம்பங்களைப் பார்த்தோம். இவ்விரண்டிலும் தோன்றிய பிம்பங்களுக்கு இடையேயான வேறுபாடு என்ன?

முதலில் ஊசித்துளைக் காமிராவில், பொருளின் பிம்பம் திரையில் விழுகிறது ஆடியில் உருவாகும் பொருளின் பிம்பத்தைத் திரையில் வீழ்த்த முடியாது.

திரையில் வீழ்த்தப்படும் பிம்பங்கள் மெய் பிம்பம் எனவும் திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் மாய பிம்பம் எனவும் கூறப்படுகின்றன. 

மேலும், ஊசித்துளைக்காமிராவில் பெறப்படும் பிம்பம் தலைகீழானது. ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது


சமதள ஆடியில் தோன்றும் பிம்பங்களின் பண்புகள்

சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது

சமதள ஆடியில் தோன்றும் பிம்பம், மெய் பிம்பம் ஆகும் 

சமதள ஆடியில் தோன்றும் பிம்பமும், பொருளும் ஒரே அளவில் இருக்கும் 

சமதள ஆடியிலிருந்து, பொருள் இருக்கும் தொலைவும், பிம்பம் தோன்றும் தொலைவும் சமம்

சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் பெறும்.



செயல்பாடு : 8

EINSTEIN என்ற வார்த்தையில் எட்டு எழுத்துகள் உள்ளன. 

1. EINSTEIN என்ற வார்த்தையைப் படத்தில் உள்ள பெயர்ப்பலகையில் எழுதுக

 2. பெயர்ப் பலகையில் உள்ள எழுத்துகள், சமதளஆடியில் தோன்றுவதை எழுதுக. 

3. எழுத்துக்கள் எதிரொளிக்கப்பட்டப்பிறகு, எத்தனை எழுத்துக்கள் தோற்றத்தில் மாற்றமடைந்துள்ளன. 

4. எழுத்துகள் எதிரொளிக்கப்பட்ட பிறகு, மாறாத - எழுத்துகளை எழுதுக.


விடைகள் 


(iii) எழுத்துக்கள் (E, N, S)

(iv) I, T

ஆம்புலன்சுகளில் " AMBULANCE " என்ற வார்த்தை பின்னோக்கி ஏன் இது போன்று எழுதப்படுகிறது? 


சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பு இங்குப் பயன்படுத்தப்படுகிறது. ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக "AMBULANCE" என நேராகத் தெரியும்


சமதள ஆடி மற்றும் ஊசித்துளைக் காமிரா இவற்றில் தோன்றும் பிம்பங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு

ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பம்

மெய் பிம்பம்

பிம்பத்தின் அளவு, பொருளின் அளவுடன் ஒப்பிடும் போது மாறுபடலாம்

தலைகீழ்ப் பிம்பம்

சமதள ஆடியில் தோன்றும் பிம்பம்

மாய பிம்பம்

பிம்பம் மற்றும் பொருளின் அளவு சமம்

நேரான பிம்பம்


செயல்பாடு : 9

வானவில் ஒன்றை உருவாக்கலாமா!

நீங்கள் வானத்தில் வானவில்லைப் பார்த்ததுண்டா? வானவில் ஒன்றை வகுப்பறையில் உருவாக்கலாமா? அகன்ற, உயரமான ஒரு பாத்திரம் ஒன்றை நேரடி சூரிய ஒளி இருக்கும் இடத்தில் வைக்கவும். படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு சமதள ஆடியைப் பாத்திரத்தினுள் வைக்கவும். இப்போது நீங்கள் சூரிய ஒளியானது கூரையின்மீது அல்லது வெள்ளைச்சுவரின் மேல் பிரதிபலிப்பதைக் காணலாம். அடுத்து பாத்திரத்தில் மெதுவாக நீரை ஊற்றவும். தண்ணீர் குறிப்பிட்ட மட்டத்தில் வரும் போது, சுவரில் அழகான வானவில் தோன்றும் நிறங்கள் கிடைக்கும். ஒருவேளை நிறங்கள் தெளிவாக இல்லையெனில், கண்ணாடியின் நிலையைச் சற்றே சரிசெய்யவும். சூரிய ஒளியில் இவ்வாறு தோன்றுவது ஒளியின் நிறமாலை என்று அழைக்கப்படுகிறது.



வாகனங்களின் பின்புறம் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன?

 1. சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் குறைவான அளவில் சிதறடிக்கப்படுகின்றன. 

2. சிவப்பு நிறமானது மற்ற நிறங்களைவிட அதிக அலைநீளம் கொண்டது ஆகும். எனவே, சிவப்பு நிறம் காற்றில் அதிக தொலைவு பயணம் செய்யும்.



7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : ஒளியியல்