Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | பிரதிபலிக்கும் தொலைநோக்கி (Reflecting telescope)

ஒளியியல் கருவிகள் - பிரதிபலிக்கும் தொலைநோக்கி (Reflecting telescope) | 12th Physics : UNIT 7 : Wave Optics

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்

பிரதிபலிக்கும் தொலைநோக்கி (Reflecting telescope)

பெரிய அளவிலான மற்றும் ஒளியியல் குறைபாடுகளற்ற பிம்பங்களைத் தோற்றுவிக்கும் லென்ஸ்களை உருவாக்குவது மிகவும் கடினமானது மற்றும் பொருட்செலவு மிக்கது ஆகும்.

பிரதிபலிக்கும் தொலைநோக்கி (Reflecting telescope)


படம் 6.89 பிரதிபலிக்கும் தொலை நோக்கி

பெரிய அளவிலான மற்றும் ஒளியியல் குறைபாடுகளற்ற பிம்பங்களைத் தோற்றுவிக்கும் லென்ஸ்களை உருவாக்குவது மிகவும் கடினமானது மற்றும் பொருட்செலவு மிக்கது ஆகும். நவீன தொலைநோக்கிகளில் பொருளருகு லென்ஸ்களுக்கு மாற்றாக குவி ஆடிகள் பயன்படுகின்றன.

குவி ஆடிகள் பொருளருகு லென்ஸாகச் செயல்படும் தொலை நோக்கிக்கு பிரதிபலிக்கும் தொலை நோக்கி என்று பெயர். இது மற்ற தொலைநோக்கிகளைவிட கூடுதல் சிறப்பினைப் பெற்றுள்ளது. அவற்றில் ஒரே ஒரு பரப்பினை மட்டும் மெருகேற்றிப் பளபளப்பாக வைத்துக் கொள்வது போதுமானதாகும். லென்ஸ்கள் அவற்றின் விளிம்புகளில் மட்டுமே தாங்கி நிறுத்தப்படுகின்றன. ஆனால், ஆடிகளைப் பயன்படுத்தும்போது அவற்றின் பின்பக்கம் முழுவதையும் தாங்கிப்பிடிப்பதற்குப் பயன்படுத்தலாம். இருப்பினும், பிரதிபலிக்கும் தொலைநோக்கியில் ஒரு குறைபாடு உள்ளது. அதாவது, பொருளருகு ஆடி தொலைநோக்கிக் குழலின் உள்ளேயே ஒளி குவிக்கப்படுகிறது. கண்ணருகு லென்சினை குழலின் உள்ளே பொருத்தி பிம்பத்தைக் காண்பது சிரமமாகும். இக்குறைபாடுதற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதாவது படம் 6.89 இல் காட்டியுள்ளவாறு, இரண்டாவது குவி ஆடி ஒன்றினைப் பயன்படுத்தி குழலின் உள்ளே குவியப்படுத்தப்படும் ஒளியை, குழலின் வெளிப்பக்கமாக கொண்டுவந்து பிம்பத்தைக் காணலாம்,

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்