Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | எண்கள் மற்றும் அதன் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு

எண்கள் | பருவம் 2 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - எண்கள் மற்றும் அதன் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு | 6th Maths : Term 2 Unit 1 : Numbers

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : எண்கள்

எண்கள் மற்றும் அதன் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு

நாம் 36 மற்றும் 48 இன் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம காண்போம். முதலில், வகுத்தல் முறையில் 36 மற்றும் 48 இன் காரணிகளைக் காண வேண்டும்.

எண்கள் மற்றும் அதன் மீ.பெ.கா மற்றும் மீ.சி. ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு

நாம் 36 மற்றும் 48 இன் மீ.பெ.கா மற்றும் மீ.சி. காண்போம். முதலில், வகுத்தல் முறையில் 36 மற்றும் 48 இன் காரணிகளைக் காண வேண்டும்.

36 = 2 × 2 × 3 × 3; 48 = 2 × 2 × 2 × 2 × 3


மீ.பெ.கா = 2 × 2 × 3 =12

மீ.சி. = 2 × 2 × 3 × 2 × 2 × 3 = 144, இதைக் கவனித்தால்,

36 × 48 = 144 × 12 = 1728 ஆகக் கிடைக்கிறது.

இதிலிருந்து, நாம் பெறுவது

கொடுக்கப்பட்ட எண்களின் பெருக்கற்பலன் = அவற்றின் மீ.பெ.கா × மீ.சி..

பொதுவாக, எவையேனும் 2 எண்கள் x மற்றும் y ஆகியவற்றிற்கு,

x × y = மீ.பெ.கா (x , y) × மீ.சி. (x , y)


எடுத்துக்காட்டு 12 : இரு எண்களின் மீ.சி. 432 மற்றும் அவற்றின் மீ.பெ.கா 36. ஓர் எண் 108 எனில், மற்றோர் எண் என்ன?

தீர்வு:

இரு எண்களின் பெருக்கற்பலன் = அவற்றின் மீ.பெ.கா × மீ.சி.

108 × மற்றோர் எண் = 432 × 36

ஆகவே, மற்றோர் எண் = (432 × 36) ÷ 108 = 144


எடுத்துக்காட்டு 13:

இரு சார்பகா எண்களின் மீ.சி. 5005. ஓர் எண் 65 எனில், மற்றோர் எண் என்ன?

தீர்வு :

இரு எண்களின் பெருக்கற்பலன் = அவற்றின் மீ.பெ.கா × மீ.சி..

மேலும், எண்கள் சார்பகா என்பதால் அவற்றின் மீ.பெ.கா. 1 ஆகும்.

65 × மற்றோர் எண் = 5005 × 1

ஆகவே, மற்றோர் எண் = 5005 ÷ 65 = 77


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : எண்கள்