வரலாறு - மதம் - ரிக் வேதகாலத்திற்கு பிந்தைய வேதகாலம் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes
மதம் - ரிக் வேதகாலத்திற்கு பிந்தைய வேதகாலம்
ரிக் வேதத்தைத் தொடர்ந்து யஜுர், சாம, அதர்வண வேதங்கள் எழுதப்பட்டன. பிராமணங்கள் என அழைக்கப்படும் சடங்குகளின் தொகுப்புகள், இசைப் பாடல் வரிகள், காடுகளில் இரகசியமாகக் கற்று அறியவேண்டிய அறிவு, சில ரிக்வேதப் பாடல்களின் விளக்கங்கள் அடங்கிய ஆரண்யகங்களும் உபநிடதங்களும் கி.மு. (பொ.ஆ.மு). 1000 - 600 காலகட்டத்தில் கங்கைச் சமவெளியில் தொகுக்கப்பட்டன.