மனித உறுப்பு மண்டலங்கள் | பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - சுவாச மண்டலம் | 6th Science : Term 2 Unit 6 : Human Organ systems

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 6 : மனித உறுப்பு மண்டலங்கள்

சுவாச மண்டலம்

சுவாச வாயுக்களின் பரிமாற்றம் மற்றும் சுவாசித்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ள மண்டலம் சுவாச மண்டலம் ஆகும். இதில் நாசித்துளைகள், நாசிக்குழி, தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல், கிளை மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல்கள் அடங்கும். இதன் மூலம் தூய்மையான காற்றானது உள்ளிழுக்கப்பட்டு வெளிவிடப்படுகின்றது.

சுவாச மண்டலம்

சுவாச வாயுக்களின் பரிமாற்றம் மற்றும் சுவாசித்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ள மண்டலம் சுவாச மண்டலம் ஆகும். இதில் நாசித்துளைகள், நாசிக்குழி, தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல், கிளை மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல்கள் அடங்கும். இதன் மூலம் தூய்மையான காற்றானது உள்ளிழுக்கப்பட்டு வெளிவிடப்படுகின்றது. நுரையீரலில் காற்றுக்கும், இரத்தத்திற்கும் இடையே 0. மற்றும் CO பரிமாற்றம் நடைபெறுகிறது. குரல் வளைமூடி (எப்பிகிளாட்டிஸ்) என்ற அமைப்பு சுவாசப்பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கின்றது.



நுரையீரல்கள்

சுவாச உறுப்புகளில் நுரையீரல்கள் முக்கியமானவையாகும். மார்பறையினுள் அமைந்துள்ளன. பொதுவாக இவை காற்றுக்குழாய் என்று அழைக்கப்படும். மூச்சுக்குழலானது வளையங்களால் குருத்தெலும்பு தாங்கப்பட்டுள்ளது. இது குரல்வளை மற்றும் தொண்டையை நுரையீரல்களுடன் இணைத்து காற்று செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

மூச்சுக்குழல் மார்பு அறையினுள் நுழைந்தவுடன் இரு மூச்சுக்கிளைக் குழல்களாகப் பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்குள் நுழைந்து பல நுண்குழல்களாகப் பிரிந்து, முடிவில் நுண் காற்றுப்பைகளில் (ஆல்வியோலைகளில்) திறக்கின்றன. நுரையீரல்களைச் சுற்றி இரு அடுக்குகளைக் கொண்ட ஒரு பாதுகாப்புப் படலம் காணப்படுகிறது. இதற்கு ப்ளூரா (Pleura) என்று பெயர்.

வாயுக்களின் ஊடுருவல் (O2 மற்றும் CO2) நுண்காற்றுப்பையைச் சுற்றியுள்ள மெல்லிய சுவர் வழியாக நடைபெறுகிறது. 

 

நோக்கம்: சுவாச மண்டலத்தின் மூலம் நடைபெறும் வாயுக்களின் பரிமாற்றம் மூன்று வேறுபட்ட செயல் நிலைகளைக் கொண்டது. அவை

1. வெளிசுவாசம்:  நாசித்துவாரங்களின் வழியாக காற்றிலுள்ள O2 உள்ளிழுக்கப்பட்டு, நுரையீரல்களில் உள்ள CO2 வெளிவிடப்படுகிறது.

2. உட்சுவாசம்: இரத்த ஓட்ட மண்டலம் வழியாக O2 உடல் முழுவதும் அளிக்கப்பட்டு அங்குள்ள CO2 எடுத்து செல்லப்படுகிறது. இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினால் O2 மற்றும் CO2 கடத்தப்படுகிறது.

3. செல்சுவாசம்: செல்கள் வழியாக O2 -வை எடுத்துக்கொண்டு CO2 வை வெளிவிடுகின்றன.

 

செயல்பாடு 5:

சுவாசிக்கும்போது வெளியேற்றப்படும் காற்றில் கார்பன் - டை - ஆக்சைடு (கரியமில வாயு) அதிகமாக உள்ளது என்பதை நிருபித்தல்.

தேவையான பொருள்கள் : மூடியுடன் கூடிய இரண்டு கண்ணாடி குவளைகள், உறிஞ்சி (straw) மற்றும் சுண்ணாம்பு நீர்.

செய்முறை: இரண்டு குவளைகளிலும் சுண்ணாம்பு நீரை ஊற்றி, மூடி கொண்டு மூடவும். முதல் குவளையை அப்படியே வைக்கவும், இரண்டாவது குவளையின் மூடியில் துளையிடவும் உறிஞ்சியைச் செருகி, பின்னர் அதனுள்ளே காற்றை ஊதிவிடவும்.

கண்டறிதல்: இரண்டாவது குவளையில் உள்ள சுண்ணாம்பு நீர் பால் போன்று மாறியுள்ளது. கரியமில வாயு மட்டுமே சுண்ணாம்பு நீரைப் பாலாக மாற்றும் தன்மையுடையது.

முடிவு: சுவாசிக்கும் போது வெளியேற்றப்பட்ட காற்றில் கார்பன்- டை- ஆக்சைடு அதிகமாக உள்ளது என அறிய முடிகிறது.

 

மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய 300 மில்லியன் நுண் காற்றுப்பைகள் உள்ளன. கொட்டாவி விடுதல் மூலம் நாம் அதிக அளவு ஆக்ஸிஜனை உள்வாங்கி  அதிக அளவு வெளியிடுகிறோம். கார்பன்-டை-ஆக்சைடு

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 6 : மனித உறுப்பு மண்டலங்கள்