அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - ஒற்றைக் குடியுரிமை | 8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship
ஒற்றைக்
குடியுரிமை
இந்திய
அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. அதுவே இந்தியக் குடியுரிமை
எனப்படுகிறது. ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய கூட்டாட்சி
அமைப்பு கொண்டுள்ள நாடுகளில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுகிறது. (தேசிய குடியுரிமை,
மற்றும் மாநில குடியுரிமை)
இந்திய
குடிமக்கள் அனைவரும் இந்தியாவில் எங்கு பிறந்திருந்தாலும், வசித்தாலும் மாநில வேறுபாடின்றி
குடியுரிமைக்கான அனைத்து அரசியல் மற்றும் குடிமையியல் உரிமைகளை அனுபவிக்கின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா?