Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: புவியின் ஈர்ப்பு முடுக்கம்

11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: புவியின் ஈர்ப்பு முடுக்கம்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் புவியின் ஈர்ப்பு முடுக்கம், குத்துயரம், ஆழம் மற்றும் குறுக்குக்கோடு ஆகியவற்றைச் சார்ந்து ஈர்ப்பின் முடுக்கம் மாறுபடுதல்

எடுத்துக்காட்டு 6.7

(அ) 15 மீட்டர் உயரத்திலிருந்து 1/2 kg நிறையுடைய மாம்பழம் கீழே விழுகிறது. கீழே விழத் தொடங்கும் போது அதன் ஈர்ப்பின் முடுக்கம் யாது? (g = 9.8 m s-2; புவியின் ஆரம் = 6400 × 103 m)

தீர்வு:


(ஆ) புவி பரப்பிலிருந்து 1600 km உயரத்தில் ஒரு துணைக்கோள் புவியை சுற்றி வருகின்றது. புவியின் ஈர்ப்பு விசையால் துணைக்கோள் அடையும் முடுக்கம் யாது?

தீர்வு


இந்த இரு எடுத்துக்காட்டுகள் மூலம் புவிக்கு அருகே ஈர்ப்பின் முடுக்கம் மாறிலியாக உள்ளது எனத்தெரிகிறது.


எடுத்துக்காட்டு 6.8

உன் பள்ளி ஆய்வகத்தில் g' மதிப்பினைக் காண்க.

தீர்வு 

உன் பள்ளி அமைந்துள்ள ஊர்/ நகரத்தின் குறுக்குக் கோட்டு மதிப்பினை கணினியில் கூகுள் தேடுதல் மூலம் காண்க.

உதாரணமாக சென்னைக்கு குறுக்குக் கோட்டு மதிப்பு 13° ஆகும்.


இங்கு  ω2R = (2x3.14/86400)2 × (6400x103) = 3.4 ×10−2 m s−2.

λ ன் மதிப்பு ரேடியனில் இருக்க வேண்டும். டிகிரியில் இருக்கக் கூடாது. 13° என்பது 0.2268 ரேடியனுக்குச் சமம்.

g′ = 9.8  ( 3.4 × 10−2 ) × ( cos 0.2268)2

g= 9.7677 m s−2

11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்