Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள்

அரசியல் அறிவியல் - அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் | 11th Political Science : Chapter 10 : Election and Representation

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி

அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள்

அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் என்னும் கருத்தாக்கமே ஊழலைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இதில் தனிநபர் நிதியளிப்புகளுக்கு மாற்றாக அரசாங்கமே தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள்:

அரசின் நிதியுதவி என்றால் என்ன?

அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் என்னும் கருத்தாக்கமே ஊழலைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இதில் தனிநபர் நிதியளிப்புகளுக்கு மாற்றாக அரசாங்கமே தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது


அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் குறித்த இந்திரஜித் குப்தா குழு, 1998

அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் பற்றி ஆராய்வதற்காக இந்திரஜித் குப்தா தலைமையிலானகுழு 1998-ல் நியமிக்கப்பட்டது. அக்குழுவானது அரசியல் கட்சிகளுக்கு அரசின் நிதியுதவியுடனான தேர்தல்களை நடத்துவதற்கான அரசமைப்பு அம்சங்கள், சட்டக் கூறுகள், பொது விருப்பம் போன்றவற்றினை கொள்கை அடிப்படையில் ஆராயும் அதிகார வரம்பினைக் கொண்டிருந்தது. இதன் மூலம் குறைவான நிதி ஆதாரங்களைக் கொண்ட கட்சிகளும் மிகுதியான நிதி ஆதாரங்களைக் கொண்ட கட்சியுடன் தேர்தலில் போட்டியிடும் சூழலை நிறுவுவதாகும்


இரண்டு கூடுதல் வரையறைகள்

) அரசின் தேர்தல் நிதி சுயேட்ச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படமாட்டது. வாக்காளர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதுடன் தங்களுக்கென தேர்தல் ஆணையத்தால் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தேசிய அல்லது மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மட்டுமே அரசின் தேர்தல் நிதியுதவி வழங்கப்படும்.

) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்களுக்கு சில வகையினங்களில் மட்டுமே குறுகிய காலத்திற்கு நிதியுதவி வழங்கப்படும்.

மேலும் இக்குழு தனியாக தேர்தல் நிதியை உருவாக்க பரிந்துரைத்தது. இதற்கு மத்திய அரசின் சார்பாக வருடத்திற்கு 600 கோடி ரூபாயும், அனைத்து மாநில அரசுகளும் அதற்கு நிகரான பங்களிப்பினை ஒட்டு மொத்தமாக மேற்கொள்ளவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இக்குழுவின் பரிந்துரையில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அரசிடமிருந்து தேர்தல் நிதியைப் பெறும் தகுதியுள்ளவர்களாவதற்கு கடந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்தியிருக்க வேண்டியது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி