மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - புள்ளியியல் | 7th Maths : Term 3 Unit 5 : Statistics

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்

புள்ளியியல்

கற்றல் நோக்கங்கள் ● வெவ்வேறான தொடர்ச்சியற்ற தரவுகளின் சேகரிப்பையும் அமைப்பையும் நினைவுகூர்தல். ● கூட்டுச் சராசரி, இடைநிலை மற்றும் முகடு போன்றப் பல்வேறு வகையான சராசரிகளை அடையாளம் காணுதலும் வேறுபடுத்துதலும். ● வெவ்வேறு வகையான சராசரிகளைக் கணக்கிடக் கற்றுக்கொள்ளுதல்.

அலகு 5

புள்ளியியல்



கற்றல் நோக்கங்கள்

வெவ்வேறான தொடர்ச்சியற்ற தரவுகளின் சேகரிப்பையும் அமைப்பையும் நினைவுகூர்தல்

கூட்டுச் சராசரி, இடைநிலை மற்றும் முகடு போன்றப் பல்வேறு வகையான சராசரிகளை அடையாளம் காணுதலும் வேறுபடுத்துதலும்

வெவ்வேறு வகையான சராசரிகளைக் கணக்கிடக் கற்றுக்கொள்ளுதல்


அறிமுகம் 

மீள்பார்வை

ஆறாம் வகுப்பில் தரவுகளின் வகைப்பாட்டையும் தரவுகளைப் படங்கள் மூலம் குறித்தலையும் பற்றி நாம் கற்றுள்ளதை இப்போது நினைவுகூர்வோம்.

பின்வரும் அட்டவணைகளைக் கவனித்துக் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.

அட்டவணை

கணிதத் தேர்வில் 30 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் (50 மதிப்பெண்களுக்கு) கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன

(i) மாணவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் என்ன

(ii) எத்தனை மாணவர்கள் 40 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்

(iii) மாணவர்கள் பெற்ற குறைந்தபட்ச மதிப்பெண்ணைக் கண்டுபிடி

(iv) எத்தனை மாணவர்கள் 21 முதல் 23 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

(v) மதிப்பெண்களுக்கிடையிலான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வேறுபாட்டினைக் கண்டுபிடி?

அட்டவணை 2

ஒரு குறிப்பிட்ட வாரத்தில் ஏழாம் வகுப்பில் வருகை தராத குழந்தைகளின் தரவுகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


(i) குறைந்தபட்ச எண்ணிக்கையிலான வருகை தராத நாளைக் கண்டுபிடி

(ii) 10 பேர் வருகை தராத நாளைக் குறிப்பிடுக

(iii) வாரத்தின் எந்த நாளில் அனைவரும் வருகைபுரிந்தனர்

(iv) வாரத்தின் எந்த நாளில் அதிகமான குழந்தைகள் வருகை தரவில்லை



7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்