Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | இலைத் துளையின் அமைப்பு

11 வது தாவரவியல் : அலகு 11 : தாவரங்களில் கடத்து முறைகள்

இலைத் துளையின் அமைப்பு

இலைகளின் புறத்தோல் மற்றும் பசுமையான தண்டில் காணப்படும் எண்ணற்ற சிறிய துளைகள் இலைத்துளைகள் எனப்படும்.

இலைத் துளையின் அமைப்பு.


இலைகளின் புறத்தோல் மற்றும் பசுமையான தண்டில் காணப்படும் எண்ணற்ற சிறிய துளைகள் இலைத்துளைகள் எனப்படும். இலைத்துளையின் நீளம் மற்றும் அகலம் முறையே 10-40 மைக்ரான் மற்றும் 3-10 மைக்ரான் ஆகும். முதிர்ந்த இலைகளில் ஒரு சதுர மில்லி மீட்டருக்கு 50 முதல் 500 என்ற எண்ணிக்கையில் இவை காணப்படும். இலைத்துளை இரண்டு காப்பு செல்களால் ஆனது. இவை பிறை நிலா அல்லது சிறுநீரக வடிவத்தில் அமைந்த உயிருள்ள புறத்தோல் செல்களாகும். காப்பு செல்களைச் சுற்றிக் காணப்படும் புறத்தோல் செல்களுக்குத் துணை செல்கள் என்று பெயர். காப்பு செல்களின் இரு முனைகள் இணைந்தும் முனைகளுக்கு இடைப்பட்ட பகுதி இணையாமலும் இருப்பதால் துளை வடிவம் உருவாகிறது. காப்பு செல்லின் உட்புறச் சுவர் வெளிப்புறச் சுவரை விட தடித்தது (படம் 11.14). இலைத்துளையின் உட்புறம் காணப்படும் குழி இலைத்துளை அறை எனப்படும். இது செல்லிடைவெளிகளுடன் தொடர்பு கொண்டது.



11 வது தாவரவியல் : அலகு 11 : தாவரங்களில் கடத்து முறைகள்