Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | அலகு 10 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 10 : Changes Around Us

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

மாணவர் செயல்பாடுகள்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் : கேள்வி பதில்களுடன் மாணவர் செயல்பாடுகள், தீர்வு

செயல்பாடு 1

ஆதித்யா கீழ்க்கண்ட மாற்றங்களை இயற்பியல் மாற்றங்கள் அல்லது வேதியியல் மாற்றங்கள் என வகைப்படுத்த விரும்புகிறான். நீங்கள் அவனுக்கு உதவ முடியுமா?

1. பனிக்கட்டி உருகுதல்

2. பழங்கள் பழுத்தல்

3. இரும்பு துருப்பிடித்தல்

4. உணவு கெடுதல்

5. விறகு எரிதல்

6. பட்டாசு வெடித்தல்

7. கற்பூரம் எரிதல்



செயல்பாடு 2

இரு சோதனைக் குழாய்களையும், இரு துருப்பிடிக்காத இரும்பு ஆணிகளையும் எடுத்துக்கொள்க. ஒரு சோதனைக் குழாயில் சிறிதளவு நீரை ஊற்றி ஒரு ஆணியைப் போடவும். மற்றொரு சோதனைக் குழாயில் சிறிதளவு நீரை ஊற்றி இன்னொரு ஆணியை அதனுள் போடவும். இரண்டாவது குழாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை ஊற்றி ஆணி மூழ்குமாறு செய்யவும். ஒருசில நாட்கள் கழித்து நடந்த மாற்றங்களை உற்றுநோக்கவும். எந்த ஆணி துருப்பிடித்துள்ளது? எந்த ஆணி துருப்பிடிக்கவில்லை? ஏன் என்று காரணம் கூற இயலுமா?


செயல்பாடு 3

அருகிலுள்ள மளிகைக் கடையிலிருந்து சிறிதளவு ஈஸ்ட்டை வாங்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது கோதுமை மாவினை நீர் சேர்த்துப் பிசையவும். இந்த ஈஸ்ட்டை அதனுடன் சேர்த்து சில மணி நேரம் வெயிலில் மூடி வைக்கவும் நடக்கும் மாற்றங்களை உற்று நோக்கவும், இச்சோதனையிலிருந்து நீ என்ன முடிவுக்கு வருகிறாய்?


செயல்பாடு 4

இரு உலர்ந்த சோதனைக் குழாய்களை எடுத்துக் கொள்ளவும். ஒன்றில் சல்பியூரிக் அமிலத்தையும் மற்றொன்றில் சோடியம் ஹைட்ராக்சைடையும் எடுத்துக்கொள்ளவும். மெதுவாக கவனமுடன் சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலை சல்பியூரிக் அமிலத்துடன் சேர்க்கவும். சோதனைக் குழாயின் பக்கவாட்டுப் பகுதியை தொட்டுப்பார். என்ன உணர்கிறாய்? இந்த வினையிலிருந்து நீ என்ன முடிவுக்கு வருகிறாய்?


செயல்பாடு 5

உலர்ந்த சோதனைக் குழாய் ஒன்றை சிறிதளவு எடுத்துக்கொள். அதில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் சேர். ஒரு சிறிய மெக்னீசிய நாடாத்துண்டு அல்லது ஜிங்க் (துத்தநாகம்) உலோகத்துண்டை அதனுடன் போடு. என்ன காண்கிறாய்? இப்பொழுது ஒரு எரியும் தீக்குச்சியை சோதனைக்குழாயின் வாய் அருகே கொண்டு வா. நீ என்ன கேட்கிறாய்? இச்சோதனையிலிருந்து நீ என்ன அறிகிறாய்?


மின்னாற்பகுத்தல் எனப் பொருள்படும் எலக்ட்ரோலைசிஸ்' என்ற சொல் மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானியால் 19ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மற்றும் 'லைசிஸ்' என்ற 'எலக்ட்ரான்' இரு சொற்களிலிருந்து உருவானது. எலக்ட்ரான் என்பது மின்சாரத்தைக் குறிக்கிறது. லைசிஸ் என்பது பகுத்தல் எனப் பொருள்படும்.


சுண்ணாம்புக் கல்லானது சுட்ட சுண்ணாம்பு, நீற்றுச் சுண்ணாம்பு, சிமெண்ட் ஆகியவற்றிற்கான மூலப்பொருளாகும்


என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள் உயிரி வினைவேக மாற்றிகள் எனப்படுகின்றன.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்