Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - இந்தியா | வரலாறு | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : வரலாறு : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

பாடச்சுருக்கம்


• பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய இந்தியாவில் காலனிய அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்தது.

 

• பல்வேறு ஆங்கிலேய எதிர்ப்புப் போக்குகளின் முடிவாக 1857இல் மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளத் துவங்கியதற்கு முன்பிருந்த பழைய முறைமையை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கங்களைக் கொண்ட, நிலப்பிரபுத்துவத் தலைவர்கள் இந்தக் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்தனர்.

 

• கிளர்ச்சியின் தலைவர்கள் தொலைநோக்குப் பார்வையின்றி உள்ளூர் நோக்கங்களுக்காக கிளர்ச்சியை வழிநடத்திய போதிலும் கொடுங்கோன்மையான அன்னிய அரசுக்கு சவால்விட்டு எதிர்க்கும் வகையில் ஒரு முற்போக்கான முயற்சியாக அது அமைந்தது.

 

• சுரண்டல் வாத, அடக்குமுறை சார்ந்த ஆங்கிலேய அரசுக்கு எதிரான பொதுக்கருத்துகளை உருவாக்கிய இந்திய தேசிய இயக்கம், காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களில் தங்களையும் ஈடுபடுத்திக்கொள்ள இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தியது.

 

• தேசிய அரசியலில் பொதுமக்கள் பங்கேற்பதை அதிகரிக்க சுதேசி இயக்கம் உதவியது.

 

கலைச்சொற்கள்




நினைத்ததை நிறைவேற்ற போடப்பட்ட திட்டம் : orchestrated organized to achieve a desired effect

 

இரகசிய : clandestine secret

 

மீட்கின்ற : restorative re-establishing

 

கீழ்க்குத்தகைக்கு விடுதல், உள் குத்தகைக்கு விடுதல் : subletting property leased by one lessee to another

 

அனைத்து மக்களுக்கும் சமமான : egalitarian equal rights for all people

 

வலுக்கட்டாயமாக : coercive forcible

 

தாக்குதல் மூலம் பணம், பொருள் பறித்தல் : extortion the practice of taking something from an unwilling person by physical force

 

நிறைவில்லாத, திருப்தியற்ற : disgruntled dissatisfied, frustrated 

 

மிக மோசமான, படுபாதாளமான : abysmal extremely bad, deep and bottomless

 

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்