Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பாடச்சுருக்கம் - உயிரி மூலக்கூறுகள்

தாவரவியல் - பாடச்சுருக்கம் - உயிரி மூலக்கூறுகள் | 11th Botany : Chapter 8 : Biomolecules

11 வது தாவரவியல் : அலகு 8 : உயிரி மூலக்கூறுகள்

பாடச்சுருக்கம் - உயிரி மூலக்கூறுகள்

செல்கள் நீர், கனிமக் கூட்டுப்பொருட்கள், கரிமக் கூட்டுப்பொருட்கள் ஆகியவற்றால் ஆனவை.

பாடச்சுருக்கம்

 

• செல்கள் நீர், கனிமக் கூட்டுப்பொருட்கள், கரிமக் கூட்டுப்பொருட்கள் ஆகியவற்றால் ஆனவை. இவற்றின் உயிரி மூலக்கூறுகளாகக் கார்போஹைட்ரேட்டுகள், லிப்பிடுகள், புரதங்கள், நொதிகள், நியூக்ளிக் அமிலங்கள் ஆகியவை திகழ்கின்றன.


• கார்போஹைட்ரேட்டுகளில் எளிய சர்க்கரைகள் (மானோ சாக்கரைடுகள்) கூட்டுச் சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) ஆகியவை அடங்கும். கூட்டுச் சர்க்கரைகள் சேமிப்பு பொருட்களாகவோ அல்லது செல்களுக்கு வடிவுருவம் தரும் சர்க்கரைகளாகவோ உள்ளன.


• செல் சவ்வுகளில் காணப்படும் முதன்மைக் கூறாக லிப்பிடுகள் திகழ்கிறது. ஆற்றல் சேமிக்கும் சேர்மங்களாகவும், சமிக்ஞை மூலக்கூறுகளாகவும் இவை திகழ்கின்றன.


• புரதங்கள் 20 வகை அமினோ அமிலங்களை வெவ்வேறு வரிசைகளில் பெற்ற சேர்மங்களாகும். ஒவ்வொரு அமினோ அமிலமும் குறிப்பிட்ட பண்பை வெளிப்படுத்த உதவும் குறிப்பிட்ட பக்கக் கிளைகளைப் பெற்றுள்ளன. அமினோ அமிலங்களின் குறிப்பிட்ட வரிசையே புரதத்தின் முப்பரிமாண அமைப்பைத் தீர்மானிக்கிறது.


செல்லின், முதன்மை தகவல் மூலக்கூறுகளாக நியூக்ளிக் அமிலங்கள் திகழ்கின்றன. இதன் இருவகைகளான DNA, RNA இரண்டும், பியூரின்கள், பிரிமிடின்கள் ஆகிய இரண்டையும் பெற்ற மீச்சேர்மங்களாக உள்ளன. இவற்றின் இணை நிறைவுக் காரங்களுக்கிடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்பு, அவற்றின் சுய இரட்டிப்பை வழிநடத்த உதவுகிறது.


11 வது தாவரவியல் : அலகு 8 : உயிரி மூலக்கூறுகள்