Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

வரலாறு - பாடச் சுருக்கம் - பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை | 11th History : Chapter 1 : Early India: From the Beginnings to the Indus Civilisation

11வது வகுப்பு வரலாறு : அலகு 1 : பண்டைய இந்தியா : தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

பாடச் சுருக்கம் - பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

இந்தியாவின் வரலாறு வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் ஏறத்தாழ 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்குகிறது.

பாடச் சுருக்கம்

இந்தியாவின் வரலாறு வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் ஏறத்தாழ 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்குகிறது.

வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து ஏராளமான மக்கள் குழுக்கள் இந்நிலப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இக்குழுக்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு, தனிச்சிறப்புடன் கூடிய வாழ்க்கைமுறையை உருவாக்கிக்கொண்டார்கள்.

கைக்கோடரிகளைப் பயன்படுத்திய மனிதர்கள் இந்தியாவில் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார்கள். இடைக்கற்காலத்திலிருந்து வெவ்வேறு சமூகங்கள் இந்தியாவெங்கும் பரவி, இந்தியாவின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கினார்கள்.

இந்த அனைத்துக்குழுக்களின் கூட்டான பங்களிப்பு பன்மைத்துவம் வாய்ந்த இந்தியப் பண்பாட்டுக்குச் செழுமை சேர்த்துள்ளது.

இந்தியாவின் வெவ்வேறுபட்ட மொழிகளும் பண்பாடுகளும் இந்திய வரலாற்றோடு தொடர்புடைய சிக்கலான செயல்முறையைச் சுட்டுகிறது.

முதல் நகரமயமாக்கம் சிந்து பகுதியை மையமாகக் கொண்டு ஏறத்தாழ பொ.ஆ.மு. 2600இல் நிகழ்ந்தது. சிந்து நாகரிகம் வடமேற்கு இந்தியாவில் ஒரு முக்கியமான பண்பாட்டு முறைமையாக இருந்தபோது, ஏராளமான பண்பாடுகள் இந்தியாவின் வேறு, வேறு பகுதிகளில் இருந்தன.

11வது வகுப்பு வரலாறு : அலகு 1 : பண்டைய இந்தியா : தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை