Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

வரலாறு - பாடச் சுருக்கம் - ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி | 11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms

11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

பாடச் சுருக்கம் - ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

குப்தர், வர்த்தனர் ஆகியோரது ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் சுயேச்சையான அரசுகள் தோன்றின. வட இந்தியா வலுவான மையப்படுத்தப்பட்ட அதிகாரமின்றிக் காணப்பட்டது.

பாடச் சுருக்கம்

I ஹர்ஷர்

குப்தர், வர்த்தனர் ஆகியோரது ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் சுயேச்சையான அரசுகள் தோன்றின. வட இந்தியா வலுவான மையப்படுத்தப்பட்ட அதிகாரமின்றிக் காணப்பட்டது.

ஹூணர், வல்லபியின் மைத்ரகர், கன்னோசியின் மௌகாரியர், மாண்டசோரின் வகடர், தானேஸ்வரத்தின் புஷ்யபூதி, மகதத்தின் பிற்கால குப்தர் ஆகியோர் பிரதேச முடியரசர்களாகத் திகழ்ந்தனர்.

ஹர்ஷர், சீனாவுடன் நேசமான உறவைக் கொண்டிருந்தார். சீனப் பயணியான யுவான் சுவாங் அக்காலத்தில் நிலவிய மக்களின் சமூக, மத சூழ்நிலைகளைப் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்திருந்தார்.

ஹர்ஷர் பௌத்த மதத்திற்கு ஆதரவளித்தார். கன்னோசியிலும் பிரயாகையிலும் பௌத்த மதக் கூட்டங்களைக் கூட்டினார்.

II பாலர்கள்

பாலர் வம்சத்தைத் தோற்றுவித்த கோபாலர் குறுநில மன்னர்களால் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தர்மபாலர், தேவபாலர், முதலாம் மஹிபாலர் ஆகியோர் திறமையுடன் ஆட்சி புரிந்து பல பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

விக்ரமசீலா, நாளந்தா பல்கலைக்கழகங்களுக்குப் பாலர்கள் அளித்த ஆதரவு பெளத்த, சமண, சமஸ்கிருத இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.

III ராஷ்டிரகூடர்கள்

முதலாம் கிருஷ்ணர் முதல் மூன்றாம் கிருஷ்ணர் வரை வெற்றிகரமான ஆட்சியாளர்களின் காலத்தில் ராஷ்டிரகூடர்களின் அரசு வலிமை மிக்க அரசாக உருவானது.

இலக்கியம் ராஷ்டிரகூடர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. சமஸ்கிருத, கன்னட அறிஞர்கள் தழைத்தோங்கினர்.

எல்லோராவிலும் எலிஃபண்டாவிலும் காணப்படும் கலை நுட்பம் இவர்களது பங்களிப்பே ஆகும்.

11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி