Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

வரலாறு - பாடச் சுருக்கம் - மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் | 11th History : Chapter 6 : Polity and Society in Post-Mauryan Period

11 வது வகுப்பு வரலாறு : அலகு 6 : மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

பாடச் சுருக்கம் - மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

இந்தியாவில் அலெக்சாண்டர் இறந்த பிறகு, அவரது தளபதி செலியுகஸ் நிகேடர், தொடர்ந்து வட மேற்கு இந்தியப் பகுதிகளில் ஆட்சி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இராஜாங்க உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.

பாடச் சுருக்கம்

இந்தியாவில் அலெக்சாண்டர் இறந்த பிறகு, அவரது தளபதி செலியுகஸ் நிகேடர், தொடர்ந்து வட மேற்கு இந்தியப் பகுதிகளில் ஆட்சி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இராஜாங்க உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.

செலுசியப் பேரரசு வலுவிழந்தது. அதன் ஒரு விளைவாக, அவரை அடுத்து வந்த ஓரிருவருக்குப் பிறகு, இந்தோ - கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவரான மினாண்டர் பேரரசை ஆட்சி செய்தார்.

இந்தோ - கிரேக்க அரசாட்சி சாகர்களாலும் அதைத் தொடர்ந்து பார்த்தியர் மற்றும் குஷாணர்களால் அகற்றப்பட்டது. தங்களின் ஆட்சிப் பகுதிகளை ஆள்வதற்கு சத்ரப்கள் அல்லது மாகாண ஆட்சியாளர்களை சாகர்கள் நியமித்தனர்.

சாகர் ஆட்சியாளர்களில் மிகவும் புகழ்பெற்றவர் ருத்ரதாமன். அவருக்குப் பிறகு சாகர்களை, பார்த்தியர்கள் குடிபெயரச் செய்தனர்; பார்த்தியரைத் தொடர்ந்து குஷாணர்கள் வந்தனர்.

குஷாணர்களில் புகழ் பெற்றவர் கனிஷ்கர். பௌத்தத்தின் மகாயானப் பிரிவை இவர் ஆர்வமுடன் பின்பற்றினார். இவரது காலத்தில்தான் காந்தாரக் கலை வளர்ச்சி பெற்றது.

அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், நாகார்ஜுனர் ஆகிய பௌத்தத் தத்துவஞானிகளை ஆதரித்தவர் கனிஷ்கர்.

தென்னிந்தியாவில் சாதவாகனர் அரசாட்சி பொ.. முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. தமிழ்ப் பகுதியில் (சோழ, சேர, பாண்டிய) மூவேந்தர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

தமிழ்நாட்டுக்கும் ரோமுக்கும் இடையே வணிகம் வளர்ச்சி அடைந்தது. சோழமண்டலக் (கிழக்குக்) கடற்கரையில் புகார் நகரம் ஒரு முக்கியமான துறைமுகமாக விளங்கிற்று. யவன வணிகர்கள் துறைமுக நகரங்களில் வாழ்ந்தனர்.

11 வது வகுப்பு வரலாறு : அலகு 6 : மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்