Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - குப்தர்

வரலாறு - பாடச் சுருக்கம் - குப்தர் | 11th History : Chapter 7 : The Guptas

11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்

பாடச் சுருக்கம் - குப்தர்

மௌரியப் பேரரசிற்குப் பின்னர், குப்தப் பேரரசு பெரும் ஆற்றல் மிக்கதாக உருவானது.

பாடச் சுருக்கம்

மௌரியப் பேரரசிற்குப் பின்னர், குப்தப் பேரரசு பெரும் ஆற்றல் மிக்கதாக உருவானது.

ஸ்ரீகுப்தர், குப்தப் பேரரசைத் தோற்றுவித்தார்.

சமுத்திரகுப்தர் (335-375) பல பகுதிகளைக் கைப்பற்றி, பேரரசை ஒருங்கிணைத்தார்.

இரண்டாம் சந்திரகுப்தர் தனது படையெடுப்புகளின் மூலமும் திருமண உறவுகள் மூலமும், பேரரசை மேலும் விரிவாக்கினார்.

குமாரகுப்தர் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்.

ஸ்கந்தகுப்தர் ஹுணர்களை விரட்டியடித்தார். ஆனால் இப்போரின் காரணத்தால் அவரது அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

குப்த அரசர்கள் தாம் தெய்வாம்சம் படைத்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். அவர்களுக்கு அமைச்சர்கள் குழுவும், அதிகாரிகள் குழுவும் உதவி செய்தன.

குப்த அரசர்கள் கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றை ஆதரித்தனர். அவர்களது அவையைக் காளிதாசர், அரிசேனர், அமரசிம்மர், தன்வந்திரி, வராகமிகிரர் போன்றோர் அலங்கரித்தனர்.

ஹுணர்களின் படையெடுப்பால் கருவூலம் காலியானது, பிற்கால குப்த அரசர்கள் வலிமை குன்றியது ஆகியன குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணங்களாயின.

11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்