இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு | புவியியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம் | 10th Social Science : Geography : Chapter 1 : India - Location, Relief and Drainage

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 1 : இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

பாடச்சுருக்கம்

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு : பாடச்சுருக்கம்

புவியியல் : இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

பாடச்சுருக்கம்


 இந்தியா 6 இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை வடக்கு மலைகள், வடபெரும் சமவெளிகள், தீபகற்ப பீடபூமிகள், பாலைவனம், கடற்கரை சமவெளிகள் மற்றும் தீவுகள்

 

 வடக்கு மலைகள் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. அவை டிரான்ஸ் இமயமலை, இமயமலை, பூர்வாஞ்சல் அல்லது கிழக்கு இமயமலைகள்

 

 வடபெரும் சமவெளிகள், இராஜஸ்தான் சமவெளி, பஞ்சாப் - ஹரியானா சமவெளி, கங்கை சமவெளி, பிரம்மபுத்திரா சமவெளி என நான்கு பிரிவுகளாக உள்ளன

 

 தீபகற்ப பீடபூமி இரு பிரிவுகளை உள்ளடக்கியது.1) மத்திய உயர்நிலம் 2) தக்காண பீடபூமி

 

 அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் இலட்சத் தீவுகள் இந்தியாவிலுள்ள இரண்டு பெரிய தீவுக் கூட்டங்கள்

 

 இந்தியாவின் வடிகாலமைப்பு வடஇந்திய ஆறுகள் (இமயமலை ஆறுகள்) மற்றும் தீபகற்ப ஆறுகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

 

 நர்மதை, தபதி, மாஹி மற்றும் சபர்மதி ஆறுகள் அரபிக்கடலில் கலக்கின்றன.

 

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.


10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 1 : இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு