தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் | புவியியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம் | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 6 : தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

பாடச்சுருக்கம்

சமூக அறிவியல் : புவியியல் : தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்


இயற்கை புவியியல் என்பது பல்வேறு இயற்கை அம்சங்களான நிலத்தோற்றம், வடிகாலமைப்பு, காலநிலை, மண் மற்றும் இயற்கை தாவரங்களைப் பற்றிய புவியியலின் ஒரு பகுதியாகும்.

 

தமிழ்நாட்டின் இயற்கை பிரிவுகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை மலைகள் (மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்), பீடபூமிகள் (பாரமஹால், கோயம்புத்தூர் மற்றும் மதுரை சமவெளிகள் (உள்நாட்டுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளி).

 

காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆறு மற்றும் தாமிரபரணி ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளாகும்.

 

தமிழ்நாட்டில் காணப்படும் மண் வகைகள் அதன் பண்புகளின் அடிப்படையில் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை வண்டல், கரிசல், சிவப்பு, சரளை மற்றும் உவர் மண்ணாகும்.

 

தமிழ்நாட்டின் பரப்பில் 20.21 சதவிதத்தினை காடுகள் கொண்டுள்ளது. பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், சதுப்புநிலக் காடுகள், முட்புதர்க் காடுகள் மற்றும் வெப்ப மண்டல மலைக் காடுகள் ஆகியன முக்கிய காடுகளாகும்.

 

பேரிடர் அபாய நேர்வு குறைப்பு என்பது முறையான நடவடிக்கைகளின் மூலம் அபாயத்தின் தன்மையைக் குறைப்பதாகும்.

 

நிலஅதிர்வு, எரிமலை, நிலச்சரிவு, சூறாவளி, வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியன இயற்கைப் பேரிடர்களாகும்.






10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 6 : தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்