Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | நினைவில் கொள்க

எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - நினைவில் கொள்க | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : நினைவில் கொள்க

நினைவில் கொள்க

பெரிய எண்களைப் படிக்கவும், எழுதவும் காற்புள்ளி பயன்படுகிறது.

இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் காற்புள்ளியின் பயன்பாடு வேறுபடுகிறது.

இரண்டு எண்களை ஒப்பிடும்போது, அதிக இலக்கங்களைக் கொண்ட எண் பெரிய எண்ணாகும்.

இரண்டு எண்களை ஒப்பிடும்போது, சம எண்ணிக்கையில் இலக்கங்களைப் பெற்றிருந்தால், இடப்புறம் பெரிய இலக்கத்தைக் கொண்ட எண் பெரிய எண்ணாகும்.

எண் கணிதக் கணக்கீடுகளைச் சரியாகச் செய்ய BIDMAS பயன்படுகிறது.

அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளில் பெரிய எண்கள் தேவைப்படுகின்றன

சரியான மதிப்புகள் தேவைப்படாத சூழலில் எண்களின் மதிப்பீடும், முழுமைப்படுத்தலும் தேவைப்படுகின்றன.

கொடுக்கப்பட்ட எண்ணின் மதிப்பினை தோராயமாக குறிப்பதை உத்தேச மதிப்பு என்கிறோம்.

எண்ணை முழுமையாக்குவதால் அதன் மதிப்பினை எளிதாகவும் தேவைக்கேற்பவும் கணக்கிட முடியும்.

இயல் எண்களின் (N) தொகுப்போடு பூச்சியத்தைச் சேர்க்கும்போது முழு எண்கள் (W) கிடைக்கின்றன. W = {0, 1, 2, ...}

முழு எண்களில் மிகச் சிறிய எண் '0' ஆகும்.

● 0 மற்றும் 1 முறையே முழு எண்களின் கூட்டல் சமனி மற்றும் பெருக்கல் சமனி ஆகும்.

முழு எண்களை எவ்வரிசையிலும் கூட்டவும் அல்லது பெருக்கவும் முடியும். எனவே, இது பரிமாற்றுப் பண்புடையது.

முழு எண்களின் பெருக்கலானது பரிமாற்று மற்றும் சேர்ப்புப் பண்புகளை உடையது.

கூட்டலின் மீதான பெருக்கலின் பங்கீட்டுப் பண்பை முழு எண்கள் நிறைவு செய்யும்.

முழு எண்களைப் பூச்சியத்தால் வகுப்பது வரையறுக்கப்படவில்லை.





இணையச் செயல்பாடு

எண்கள்

இறுதியில் கிடைக்கப்பெறும் படம்


படி–1 : உலாவியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியைத் தட்டச்சு செய்க அல்லது துரித துலங்கல் குறியீட்டை ஸ்கேன் செய்க.

படி–2 : ஜியோஜீப்ராவில் (இடமதிப்பு) "Place Value" என்ற பகுதி தோன்றும். அங்கே ஒரு இயல் எண் கொடுக்கப்பட்டிருக்கும். அடுத்த கணக்கிற்கு செல்ல "Problem" பொத்தானை சொடுக்கவும்.

படி –3 : அந்த பக்கத்தின் கீழ்ப்பகுதியில் டைப் செய்யப்பட எண் மற்றும் கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான விடையை அளிக்கவும்.

படி –4 : இப்போது "Place Value"–வை சொடுக்கி மேலே உள்ள எண்களுக்கான இடமதிப்புகளை அறிக. அடுத்தடுத்த பயிற்சிகளுக்கு செல்ல "Problem" பொத்தானை சொடுக்கவும்.


செயல்பாட்டிற்கான உரலி

இடமதிப்பு: https://www.geogebra.org/m/XG3PPt3U


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்