Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பாடச்சுருக்கம்

எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 1 Unit 1 : Number System

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல்

பாடச்சுருக்கம்

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்

இயல் எண்கள், பூச்சியம் மற்றும் குறை எண்களின் தொகுப்பு முழுக்களாகும்

ஒரு எண் கோட்டில், பூச்சியத்திற்கு இடது புறமாக அனைத்துக் குறை முழுக்களும், வலது புறமாக அனைத்து மிகை முழுக்களும் முறையாகக் குறிக்கப்பட்டிருக்கும்

இரு மிகை முழுக்களின் கூடுதல் மிகையாகவும், இரு குறை முழுக்களின் கூடுதல் குறையாகவும் இருக்கும்

ஒரு மிகை முழுவையும், குறை முழுவையும் கூட்டுவதற்கு அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டைக் கண்டறிந்து, பெரிய எண்ணின் குறியை இட வேண்டும்

முழுக்கள், கூட்டல் செயலியின் கீழ் அடைவுப் பண்பையும், பரிமாற்றுப் பண்பையும், சேர்ப்புப் பண்பையும் பெற்றுள்ளது

இரு மிகை முழுக்களின் பெருக்கலும், இரு குறை முழுக்களின் பெருக்கலும் ஒரு மிகை எண்ணாகும்

வெவ்வேறு குறிகளையுடைய இரு முழுக்களின் பெருக்கல் ஒரு குறையெண்ணாகும்.

முழுக்கள், பெருக்கல் செயலியின் கீழ் அடைவுப் பண்பு, பரிமாற்றுப் பண்பு, சேர்ப்புப் பண்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளது

முழுக்களின் கூட்டல் சமனி 0 ஆகும்

முழுக்களின் பெருக்கல் சமனி 1 ஆகும்.


இணையச் செயல்பாடு

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது


படி -1: 

கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜீயோ ஜீப்ரா இணையப் பக்கத்தில் "ஏழாம் வகுப்பு - எண்ணியல்என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். பருவம் - 1 ஐத் தேர்ந்தெடுக்கவும்.

படி - 2:

ஒவ்வொரு இயலுக்கும் பலபணித்தாள்கள் இருக்கும். அவற்றில்எண்ணியல்என்றபணித்தாளைத் தேர்ந்தெடுக்கவும். இதில் எண்கோட்டின் மூலமாகக் கூட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது. நழுவலை நகர்த்தி எண்களை மாற்றவும். நீ விடைகளைக் காணலாம்.


செயல்பாட்டிற்கான உரலி

எண்ணியல்: https://ggbm.at/f4w7csup 

அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.



7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல்