Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்


படித்துச் சுவைக்க.

வான் தந்த பாடம்                

எத்தனை பெரிய வானம்!      

எண்ணிப்பார் உனையும் நீயே;   

இத்தரை, கொய்யாப் பிஞ்சு,      

நீ அதில் சிற்றெறும்பே,          

அத்தனை பேரும் மெய்யாய்    

அப்படித்தானே மானே?         

பித்தேறி மேல்கீழ் என்று       

மக்கள் தாம் பேசல் என்னே !    --பாவேந்தர் பாரதிதாசன் 

 

The Lesson the sky Teaches

How Vast is the sky!

Think you of yourself;

The earth is a tiny

Others are a tiny ant

In it? is that not so?

Why talk madly of

The high and the low? –

Pavendar Bharatidasan

(translated by P. Parameswaran)

 

மொழி பெயர்க்க:

1. Strengthen the body. : உடலினை உறுதி செய்

2. Love your food : ஊண் மிக விரும்பு

3. Thinking is great : எண்ணுவது உயர்வு

4. Walk like a bull. : ஏறு போல் நட

5. Union is strength : ஒற்றுமை வலிமையாம்

6. Practice what you have learnt : கற்றது ஒழுகு

இவை அனைத்தும்பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி

 

மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க:

எட்டாக்கனி , உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை, ஆகாயத்தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்.

.கா: எட்டாக்கனி :

முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை.

விடை :

உடும்புப்பிடி :

என் தம்பிக்கு பிடிவாத குணமாத்தால் பிடித்தால் உடும்புப்பிடிதான்.

கிணற்றுத் தவளை :

கிணற்றுத் தவளை போல் உன் வாழ்வை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளாதே! (அல்லது) கிணற்றுத் தவளை போல் எதுவும் தெரியாமல் இருக்காதே.

ஆகாயத்தாமரை :

ஆகாயத் தாமரையைப் பறிக்க விரும்புவது போல் இல்லாத ஒன்றை விரும்பி ஏற்காதே.

எடுப்பார் கைப்பிள்ளை :

என் நண்பன் எடுப்பார் கைப்பிள்ளை போல் யார் எதனைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வான்; நம்பி விடுவான்.

மேளதாளத்துடன் :

எம் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சரை மேளதாளத்துடன் வரவேற்றோம்.

 

பத்தியில் இடம் பெற்றுள்ள இயல்புப் புணர்ச்சிகளையும், விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்து எழுதுக:

  காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதே போன்று காஞ்சி வைகுந்த பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வச்சிற்பங்கள் மட்டுமல்லாது பிற சிற்பங்களும் கோவில் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.

விடை :

 

இயல்புப் புணர்ச்சி சொற்கள்:

நுழைவு வாயிலின் - நுழைவு + வாயிலின்

நிற்பது போன்று - நிற்பது + போன்று

 

விகாரப்புணர்ச்சிச் சொற்கள்

1. தோன்றல் விகாரப் புணர்ச்சி

சுற்று + சுவர் à சுற்றுச்சுவர்

கலை + கூடம் à கலைக்கூடம்

தெய்வம் + சிற்பங்கள் à தெய்வச்சிற்பங்கள்

குடைவரை + கோயில் à குடைவரைக்கோயில்

2. கெடுதல் விகாரப் புணர்ச்சி

வைகுந்தம் + பெருமாள் à வைகுந்த பெருமாள்

3. திரிதல் விகாரப் புணர்ச்சி

பல்லவர் காலம் + குடைவரைக் கோவில் à பல்லவர் காலக் குடைவரைக் கோவில்

 

மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.

விடை: இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.

 

2. கயல்பானை செய்யக் கற்றுக் கொண்டாள்.

விடைகயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.

 

3. நேற்று தென்றல் காற்று அடித்தது.

விடைநேற்று தென்றல் வீசியது

 

4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.

விடை : தென்னங்கீற்றில் இருந்து நார் கிழித்தனர் (கிழித்தார்)

 

5. அணில் பழம் சாப்பிட்டது

விடை : அணில் பழம் தின்றது

 

6 .கொடியிலுள்ள மலரை எடுத்து வா.

விடை : கொடியில் உள்ள மலரைக் கொய்து வா. (அல்லது) கொடியில் உள்ள பூக்களைப் பறித்து வா?

 

கவிதை படைக்க.

மூடநம்பிக்கை, புவியைப் போற்று, அன்பின்வழி

.கா:

மூட நம்பிக்கை

பூனை குறுக்கே போனதற்குக்

கவலைப்படுகிறாயே!

அந்தப் பூனைக்கு என்ன ஆனதோ?

விடை :

புவியைப் போற்று

புத்துலகமாய் மாற்று

சுற்றுச்சூழல் காத்திடு

சுகமாய் வாழ்ந்திடு

சுகமாய் வாழ்ந்திடு

உயிரனைத்தும் பேணிடு

உலகையழிக்க நாணிடு

 

அன்பின் வழி

அன்பு எனும் ஒற்றை வழியே

இவ்வுலகினை ஆள்கிறது

அன்பு வழியும் தெய்வீக வழியும் ஒன்றே

எங்கே அன்பின் வழி உளதோ

அங்கே தெய்வம் குடி கொள்ளும்!

 

மொழியோடு விளையாடு


விடையைத் தமிழ் எண்களில் எழுதுக.


 

கண்டுபிடிக்க.

1. எண்ணும் எழுத்தும் கண் - இத்தொடரை ஒருவர் 1, 2, 3, 4, 1, 5, 6,7,4, 8, 2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றி கீழ்க்காணும் சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்.

விடைகள்:

) எழுது 1, 5, 7

) கண்ணும் - 8, 2, 3, 4

) கழுத்து - 8, 5, 6,7

) கத்து > 8, 6, 7

 

2. என் வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் - இக் கூற்று.

) உண்மை

) பொய்

) உறுதியாகக் கூறமுடியாது

விடை:

) உறுதியாகக் கூறமுடியாது

காரணம் : அனைவரும் என்று கூறிய பின் இராமன் வேறு வகுப்பு மாணவனாகக் கூட இருக்கலாம்.

 

அகராதியில் காண்க.

ஏங்கல், கிடுகு, தாமம், பான்மை, பொறி

விடை :

) ஏங்கல் - ஓசை, மயிற்குரல், அழுதல், குழந்தைகளுக்கு வரும் ஒருவகை நோய்

) கிடுகு - கேடகம், முடைந்த ஓலைக் கீற்று, சட்டப்பலகை

) தாமம் - பூமாலை, வடம், புகழ், ஒளி, பரமபதம்

) பான்மை - குணம், தகுதி, முறைமை, சிறப்பு

) பொறி - புள்ளி, தழும்பு, எந்திரம், ஒளி, ஐம்பொறி

 

உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

1. மலர்விழி வீணை வாசித்தாள்: கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.

விடை:

மலர்விழி வீணை வாசித்தாள். கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர்

 

 2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.

விடை:

குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலைக்கடலில் இருந்து நீங்கினர்.

3. தேன் போன்ற மொழியைப் பவள வாய் திறந்து படித்தாள்

விடை:

பவளவாய் திறந்து மொழித்தேனைப் படித்தாள்.

 

4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.

விடை:

முத்துநகை தன் புருவவில்லில் மை தீட்டினாள்.

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


விடை:

என்னை நானே

செதுக்கும் சிற்பியாவேன் - ஆம்

கல்வி எனும் உளி கொண்டு

உயரிய சிந்தனை செயல் எனும்

நுட்பங்களுடன் என்னை நானே

வடித்து கொள்கிறேன் சிற்பமாக

 

செயல்திட்டம்

மாவட்டத்தின் கலைநயம் மிக்க இடங்களின் சிறப்புகளைப் படங்களுடன் திரட்டிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.

அந்தந்த மாவட்டத்தின் சிறப்புகளைக் குறிக்கும் தொகுப்பேட்டை, மாணவர்களே உருவாக்குங்கள்.

 

நிற்க அதற்குத் தக


என்னை மகிழச் செய்த பணிகள்

(.கா)

1. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டுப் பெற்றேன்.

2. எனது வகுப்பறையில் கரும்பலகையின் கீழ் சிதறிக் கிடந்த சுண்ணக் கட்டித்துண்டுகளைத் திரட்டி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்களிடம் கைதட்டல் பெற்றேன்.

3. வயதான என் பாட்டியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களைப் பாதுகாப்பாகக் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். அம்மா பாராட்டினாள் - மகிழ்ந்தேன் .

4. செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து மாணவப் பருவத்திலே சேவை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றேன்; மகிழ்ச்சியடைந்தேன்.

 

கலைச்சொல் அறிவோம்

விடை:

குடைவரைக்கோயில் - (Cave temple)

பெரிய மலை (வரை) களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்களைக் குறிப்பது

கருவூலம் - (Treasury)

அரசின் செல்வம் மற்றும் நிதி சார்ந்த அனைத்தும் பாதுகாக்கப்படும் இடம்.

மதிப்புறு முனைவர் - (Honorary Doctorate)

தொழில் துறை, கலை, அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றி வாழ்நாள் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படும் கௌரவ பட்டம்.

மெல்லிசை - (melody)

இனிமையான இசையை மென்மையாக வெளிப்படுத்துதல்

ஆவணக் குறும்படம் - (Document short film)

ஒரு சமூகப் பிரச்சனை, அதன் தீவிரம் அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை குறைந்த நேரத்தில் மக்கள் மனதில் பதியும் வண்ணம் எடுத்துச் சொல்லும் படம்.

புணர்ச்சி - (combination)

தமிழ் இலக்கணத்தில் இடம்பெறுவது. ஒரு சொல்லைப் பிரித்து நிலைமொழியும் வருமொழியும் எவ்வாறு இணைகின்றன என்பதைக் கூறும் இலக்கணம்.


இணையச் செயல்பாடுகள்

படிகள்

● கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி, தமிழ்நாடு இ-சேவை என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க.

● செயலியின் முதல் பக்கத்தில் ஆதார் சேவை, பான் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, காவல்துறை புகார் தொடர்பான செய்திகள் அறிதல், திருமணச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்ற பல்வேறு அரசு சார்ந்த இ-சேவைக்கான தெரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை அறிக.

● உதாரணத்திற்கு பான் கார்டு என்பதில் பான் பதிவு NSDL என்பதைத் தெரிவு செய்து online PAN application என்பதில் உங்கள் சுய விவரங்களைப் பூர்த்தி செய்து இ-சேவையில் விண்ணப்பிக்க.




வாழ்வியல்

இயல் ஆறு

திருக்குறள்


கற்பவை கற்றபின்



1. படத்திற்கு ஏற்ற குறளைத் தேர்வு செய்க.


) இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

) ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்

போஒம் அளவும் ஓர் நோய்.

) சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

விடை:

) சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

 

2. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்து பொருத்துக.


விடை:

கண்டானாம் தான் கண்டவாறு - தெரிந்த அளவில் அறிவுடையவனாய்த் தோன்றுவான்.

அறம் நாணத்தக்கது உடைத்து - அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப் போகும்

மாற்றாரை மாற்றும் படை - பகைவரையும் நட்பாக்கும் கருவி

 

3. ஐந்து சால்புகளில் இரண்டு

) வானமும் நாணமும்  

) நாணமும் இணக்கமும்

) இணக்கமும் சுணக்கமும்

) இணக்கமும் பிணக்கமும்

விடை :

) நாணமும் இணக்கமும்

 

4. கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்டமிடுக.


) அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள்- ஒப்புரவு

) உலகத்துக்கு அச்சாணி போன்றவர்- உழவர்

)தான் நாணான் ஆயின் -- நாணத்தக்கது - அறம்

) ஆழி என்பதன் பொருள் ------------ கடல்

) மாற்றாரை மாற்றும் ------------ - படை

) ஒழுக்கமான குடியில் பிறந்தவர் - செய்வதில்லை - தவறு

 

5. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்

இக்குறளின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பக்கக் கதை எழுதுக.

விடை:

  நான் வசிக்கும் ஊருக்கு அருகில் ஒரு சிறிய கிராமம் (சிற்றூர்) உள்ளது. 100 குடும்பங்களே உடைய அச்சிற்றூரில் உழவே பிரதானமான தொழில். அங்குள்ள மக்களுக்கு கல்வியறிவு கிடையாது. அவ்வூருக்கு நன்கு படித்த பணி புரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் குடி வந்தார். அவர் பெயர் சாமிநாதன்.

  அண்டை ஊரில் இருந்து ஒரு செல்வந்தன் இச்சிற்றூர் மக்களின் விளைபொருட்களை அநியாயமாக அடித்துப் பிடித்து அரைகுறை விலையில் வாங்கிக் கொண்டிருந்தான்.

  சாமிநாதன் அந்த ஊருக்கு வந்தவுடன் இதனைத் தெரிந்து கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்கள் நியாயவிலையாய் இருந்தால் வாங்கிக்கொள் இல்லையென்றால் சென்று விடு என்று மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். செல்வந்தன் காரணம் அறிந்து கொண்டு சாமிநாதனைச் சந்தித்து வழக்கமாக நான் செய்வதைத் தடையின்றி செய்ய உதவினால், உமக்குச் சரிபாதி பணத்தையும், உனக்குத் தேவையான தானியவகைகள் அனைத்தையும் விலையில்லாமல் உமக்கும் தருகிறேன் என்றார்.

  ஆனால் சாமிநாதனோ ......... நீ கோடி கோடியாய்க் கொடுத்தாலும், நீதி தவறி நடக்க மாட்டேன், இந்த அப்பாவி மக்களின் வயிற்றில் உன்னை அடிக்கவிட மாட்டேன் என்று ஓடிப்போ ...... என்று விரட்டி விட்டார்......... தன் நிலையில் இருந்து மாறவில்லை அவர்.

ஆம்.

"அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்அன்றோ .


இணையச் செயல்பாடு

திருக்குறள் – விளையாடிப் பார்ப்போமா 

 

படிகள்

கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தித் திருக்குறள் விளையாட்டு என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க.

செயலியின் அறிவுரையைத் தொடர்ந்து விளையாடு என்பதைத் தெரிவு செய்தவுடன் மாணவர், ஆசிரியர், பேராசிரியர் என்பதில் ஒன்றைத் தெரிவு செய்க.

இப்போது மிதக்கும் சீர்களைச் சரியான இடத்தில் பொருத்தி முழுமையான குறளைக் கண்டறிக. அக்குறளுக்கான விளக்கத்தை அதைத் தொடர்ந்து பார்க்க.


 

பாடநூல் வினாக்கள்


சிறுவினா

1. இறக்கும் வரை உள்ள நோய் எது?

விடை:

தன் செயலைப் பிறர் எடுத்துச் சொல்லியும் செய்யாதவனாய், தானும் சிந்தித்து செயல்படத் தெரியாதவனாய் உள்ளவனின் வாழ்வு, உயிர் போகும் வரை உள்ள நோய் ஆகும்.

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஓம் அளவும் ஓர் நோய்”.

 

2. அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)

ஐந்துசால்பு ஊன்றிய தூண்

விடை:

இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்கி எழுதுக.

இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி ஏகதேச உருவக அணி ஆகும்.

அணி விளக்கம் : ஒரு செய்யுளில் தொடர்புடைய இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து, மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஏகதேச உருவக அணி எனப்படும்.

பொருத்தம் : மேற்கூறிய இக்குறட்பாவில் சான்றோர் வாழ்விற்குத் தேவையான ஐந்து நற்குணங்களை தூண் என உருவகித்து விட்டு, சான்றாண்மையை (விதானம் - கூரை) என உருவகிக்காமல் விட்டு விட்டதால் ஏகதேச அணிக்குப் பொருந்தி வருகிறது.

 

3. உலகிற்கு அச்சாணி எனப்படுபவர் யார்? ஏன்?

விடை:

உலகிற்கு அச்சாணியாக விளங்குபவர் உழுபவரே ஆவார். மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.

 

4. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான் கண்டவாறு

இக்குறட்பாவில் பயின்று வரும் தொடைநயத்தை எழுதுக.

விடை :

காணாதான்    காணான்

கண்டானாம்    கண்டவாறு

இதில் உள்ள நயம் : சீர் மோனை, சீர் எதுகை

 

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்