உயிரினங்களின் ஒருங்கமைவு | அலகு 18 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - திசுக்கள் | 8th Science : Chapter 18 : Organisation of Life

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 18 : உயிரினங்களின் ஒருங்கமைவு

திசுக்கள்

ஒரு குறிப்பிட்ட பணியை ஒருங்கிணைந்து செய்கின்ற, ஒரே மாதிரியான அமைப்பு கொண்ட செல்களின் தொகுப்பே திசுக்கள் எனப்படும். இவை எளிய திசுக்கள் மற்றும் கூட்டுத் திசுக்கள் என இரு வகைப்படும். எளிய திசுக்கள் ஒரே வகையான செல்களால் ஆனவை.

திசுக்கள்

ஒரு குறிப்பிட்ட பணியை ஒருங்கிணைந்து செய்கின்ற, ஒரே மாதிரியான அமைப்பு கொண்ட செல்களின் தொகுப்பே திசுக்கள் எனப்படும். இவை எளிய திசுக்கள் மற்றும் கூட்டுத் திசுக்கள் என இரு வகைப்படும். எளிய திசுக்கள் ஒரே வகையான செல்களால் ஆனவை. எ.கா. சுரப்பி எபிதீலியல் திசு. கூட்டுத் திசுக்கள் வெவ்வேறு வகையான செல்களைக் கொண்டவை. எ.கா. வறட்சியான தோலில் உள்ள திசுக்கள். எனவே எளிய திசு ஒருமயத் (homogeneous) தன்மையும், கூட்டுத் திசு பன்மயத் (heterogeneous) தன்மையும் கொண்டது எனலாம்.

1. திசுக்களின் வகைகள்

அமைப்பு மற்றும் பணியைப் பொருத்து திசுக்கள் நான்கு வகைப்படும்.

•  பாதுகாப்பிற்கான எபிதீலியல் (உறையீட்டு) திசுக்கள்

•  அசைவு மற்றும் இடப்பெயர்ச்சிக்கான தசைத் (சுருங்குதல்) திசுக்கள்


•  உடலின் வெவ்வேறு அமைப்புகளை இணைக்கும் இணைப்புத் (தாங்குதல்) திசுக்கள்

•  நரம்புத் தூண்டல்களைக் கடத்தும் நரம்புத் திசுக்கள். சிக்கலான எந்த உயிரினமும் நான்கு அடிப்படைத் திசுக்களை மட்டுமே பெற்றுள்ளது.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 18 : உயிரினங்களின் ஒருங்கமைவு