Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | தாவரங்களில் கடத்து முறைகள் : முக்கியமான கேள்விகள்

தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் : முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 11 : Transport in Plants

11 வது தாவரவியல் : அலகு 11 : தாவரங்களில் கடத்து முறைகள்

தாவரங்களில் கடத்து முறைகள் : முக்கியமான கேள்விகள்

மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள், கேள்விக்கு பதிலளிக்கவும்
தாவர செயலியல்

தாவரங்களில் கடத்து முறைகள்

மதிப்பீடு

 

1. விறைப்பழுத்தம் உடைய செல்லில்,

அ) DPD =10 வளி; OP=5 வளி; TP=10 வளி

ஆ) DPD =0 வளி; OP=10 வளி; TP=10 வளி

இ) DPD = 0 வளி; OP=5 வளி; TP=10 வளி

ஈ) DPD =20 வளி; OP=20 வளி; TP=10 வளி

 

2. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக.

1) அப்போபிளாஸ்ட் என்பது வேகமானது, உயிரற்ற பகுதிகளில் நடைபெறுவது

2) சவ்விடை வழிப்பாதை வாக்குவோலை உள்ளடக்கியது

3) சிம்பிளாஸ்ட் அருகமைந்த செல்களின் பிளாஸ்மாடெஸ்மேட்டாக்களை இணைக்கிறது

4) சிம்பிளாஸ்ட் மற்றும் சவ்விடை வழி ஆகியவை செல்லின் உயிருள்ள பகுதிகளில் நடைபெறுபவை

அ) 1 மற்றும் 2

ஆ) 2 மற்றும் 3

இ) 3 மற்றும் 4

ஈ) 1,2,3,4

 

3. வறண்ட நிலத் தாவரமான ஒபன்ஷியாவில் எவ்வகை நீராவிப் போக்கு சாத்தியம்?

அ) இலைத் துளை நீராவிப்போக்கு

ஆ) லெண்டிசெல் நீராவிப்போகு

இ) க்யூட்டிகிள் நீராவிப்போக்கு

ஈ) மேற்கூறிய அனைத்தும்

 

4. இலைத்துளைத் திறப்பு எதைச் சார்ந்தது?

அ) பொட்டாசியம் அயனியின் உள்நுழைவு

ஆ) பொட்டாசியம் அயனியின் வெளியேற்றம்

இ) குளோரைடு அயனியின் உள்நுழைவு

ஈ) ஹைட்ராக்ஸில் அயனியின் உள்நுழைவு

 

5. முன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது?

அ) விறைப்பழுத்தச் சரிவு மற்றும் உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்ச்சி அடைதல்

ஆ) விறைப்பழுத்தம் காரணமாக உணவு இடம்பெயர்தல்

இ) உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடம்பெயர்தல்

ஈ) மேற்கூறியவற்றுள் ஏதுமில்லை

 

6. நன்கு நீரூற்றினாலும், மண்ணில் உள்ள அதிகப்படியான உப்பு அடர்வினால் தாவரம் வாடுகிறது. விளக்கு

 

7. தரச சர்க்கரை இடைமாற்றக் கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது?

 

8. தாவரத்தில் சுக்ரோஸினை பெறும் ஒளிச்சேர்க்கை செய்யவியலா பகுதிகளைப் பட்டியலிடுக.

 

9. நீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை?

 

10. படத்தில் காட்டியுள்ளவாறு தேர்வு செலுத்து சவ்வாலான ஒரு செயற்கையான செல் பீக்கரில் உள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதன் அளவீடுகளைப் பார்த்துக் கீழ்காணும் வினாக்களுக்கு விடை தருக.



அ) நீர் செல்லும் பாதையினை அம்புக் குறியிட்டுக் காட்டுக

ஆ) செல்லுக்கு வெளியமைந்த கரைசலின் நிலை ஐசோடானிக், ஹைப்போடானிக் அல்லது ஹைப்பர்டானிக்?

இ) செல்லின் நிலை ஐசோடானிக், ஹைப்போடானிக் அல்லது ஹைப்பர்டானிக்?

ஈ) சோதனை முடிவில் செல்லானது அதிகத் தளர்வு நிலை, அதிக விறைப்பு நிலை அல்லது அதே நிலையில் நீடிக்குமா?

உ) இச்செயற்கை செல்லில் நடைபெறுவது உட்சவ்வூடு பரவலா அல்லது வெளிச்சவ்வூடு பரவலா? காரணம் கூறு.

 



11 வது தாவரவியல் : அலகு 11 : தாவரங்களில் கடத்து முறைகள்