விகிதம் மற்றும் விகித சமம் | பருவம் 1 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - ஓரலகு முறை | 6th Maths : Term 1 Unit 3 : Ratio and Proportion

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம்

ஓரலகு முறை

ஓர் அலகின் மதிப்பைக் கணக்கிட்டு அதிலிருந்து தேவையான அலகுகளின் மதிப்பைக் கண்டறியும் முறையே ஓரலகு முறை எனப்படும்.

ஓரலகு முறை

ஓர் அலகின் மதிப்பைக் கணக்கிட்டு அதிலிருந்து தேவையான அலகுகளின் மதிப்பைக் கண்டறியும் முறையே ஓரலகு முறை எனப்படும்.


ஓரலகு முறையில் உள்ள படிநிலைகள்

கொடுக்கப்பட்ட கணக்கைக் கணிதக் கூற்றாக மாற்றவும்

ஓரலகின் மதிப்பை வகுத்தல் மூலம் கண்டறிய வேண்டும்

தேவையான அளவு எண்ணிக்கையிலான பொருட்களின் மதிப்பைப் பெருக்கல் மூலம் கண்டறிய வேண்டும்.


எடுத்துக்காட்டு 3.8

பாரி, 5 இறகுப் பந்துகளை ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் வாங்க விரும்புகிறான். ஒரு பெட்டி (12 பந்துகள்) பந்துகளின் விலை ₹180 எனில், பாரி 5 பந்துகளை வாங்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?

தீர்வு

இந்தக் கணக்கிற்கு ஓரலகு முறையைப் பயன்படுத்தி விடையைக் காணலாம்.

ஒரு பெட்டிப் பந்துகளின் விலை = ₹180

அதாவது, 12 பந்துகளின் விலை = ₹180

1 பந்தின் விலை  = = ₹15

5 பந்துகளின் விலை = 5 × 15 =  ₹75

ஆகவே, பாரி 5 பந்துகளுக்கு ₹75 செலுத்த வேண்டும்.


எடுத்துக்காட்டு 3.9

ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை அது பயன்படுத்தும்?

தீர்வு

40 நிமிடத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் = 3 அலகுகள்

ஒரு நிமிடத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் = அலகுகள்

120 நிமிடத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் = (3/40) × 120 = 9 அலகுகள்

ஆகவே, 2 மணி நேரத்தில் சூடேற்றிப் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவு 9 அலகுகளாகும்.

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம்