Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு

வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 2 : வாழ்வியல் : திருக்குறள்)


 பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்க. 

1. வாய்மை எனப்படுவது ------. 

அ) அன்பாகப் பேசுதல்

ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல் 

இ) தமிழில் பேசுதல்

ஈ) சத்தமாகப் பேசுதல் 

[விடை : ஆ. தீங்குதராத சொற்களைப் பேசுதல்] 


2. --------  செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும். 

அ) மன்னன்

ஆ) பொறாமை இல்லாதவன் 

இ) பொறாமை உள்ளவன்

ஈ) செல்வந்தன் வந்தன்

[விடை : இ. பொறாமை உள்ளவன்] 


3. ‘பொருட்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------- 

அ) பொரு + செல்வம்

ஆ) பொருட் + செல்வம் 

இ) பொருள் + செல்வம்

ஈ) பொரும் + செல்வம் 

[விடை : இ. பொருள் + செல்வம்] 


4. 'யாதெனின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ 

அ) யா + எனின்

ஆ) யாது + தெனின் 

இ) யா + தெனின்

ஈ) யாது + எனின்

[விடை : ஈ. யாது + எனின்] 


5. தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ------- 

அ) தன்நெஞ்சு 

ஆ) தன்னெஞ்சு 

இ) தானெஞ்சு 

ஈ) தனெஞ்சு 

[விடை : ஆ. தன்னெஞ்சு] 


6. தீது + உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் --------- 

அ) தீதுண்டோ

ஆ) தீதுஉண்டேத 

இ) தீதிண்டோ

ஈ) தீயுண்டோ

[விடை : அ. தீதுண்டோ] 


சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்துக. 

அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல். 

ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல். 

இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல். 

ஈ) பொருள்களைச் சேர்த்தல்.

[ விடை : ஆ, ஈ, இ, அ] 

ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல். 

ஈ) பொருள்களைச் சேர்த்தல்.

இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல். 

அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல். 


குறு வினா

1. எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்? 

ஒருவர் தன் மனம் அறிய பொய்சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் அவர் மனமே அவரைச் சுடும். 


2. வாழும் நெறி யாது? 

ஒருவர் தன் மனத்தில் பொறாமை இல்லாது ஒழுக்க நெறியோடு வாழ வேண்டும். 


3. உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்? 

உள்ளத்தில் பொய்யில்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவர். 


கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க. 


விடை : 

1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 

பூரியார் கண்ணும் உள.

2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை. 


பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடு.

அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் 'அரிச்சந்திரன்' நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் ‘பொய் பேசாமை' என்னும் அறத்தை எத்தகைய சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது. 

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு. 

2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல். 

3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் 

உள்ளத்துள் எல்லாம் உளன். 

விடை : 3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

        உள்ளத்துள் எல்லாம் உளன்.


சொல்லும் பொருளும் 

அழுக்காறாமை - பொறாமை கொள்ளாமை 

அழுக்காறு – பொறாமை

ஆக்கம் - செல்வம்

கேடு – வறுமை

ஏதிலார் - பிறர் 

பூரியார் - இழிந்தவர் 

வாய்மை - உண்மை 

செவ்வியான் - சான்றோர்



7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு