Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 2 : Idilla iyarkai

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை

வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது

அ) அடக்கமுடைமை

ஆ) நாணுடைமை

இ) நடுவுநிலைமை

ஈ) பொருளுடைமை

[விடை : இ) நடுவுநிலைமை]

 

2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்

அ) வலிமையற்றவர்

ஆ) கல்லாதவர்

இ) ஒழுக்கமற்றவர்

ஈ) அன்பில்லாதவர்

[விடை : ஆ) கல்லாதவர்]

 

3. 'வல்லுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ) வல் + உருவம்

ஆ) வன்மை + உருவம்

இ) வல்ல + உருவம்

ஈ) வல்லு + உருவம்

[விடை : ஆ) வன்மை + உருவம்]

 

4. நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) நெடுதேர்

ஆ) நெடுத்தேர்

இ) நெடுந்தேர்

ஈ) நெடுமைதேர்

[விடை : இ) நெடுந்தேர்]

 

5. 'வருமுன்னர்' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி

அ) தற்குறிப்பேற்ற அணி

ஆ) எடுத்துக்காட்டு உவமை அணி

இ) உவமை அணி

ஈ) உருவக அணி

[விடை : இ) உவமை அணி]

 

குறுவினா

1. சான்றோர்க்கு அழகாவது எது?

விடை

துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

 

2. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

விடை

தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

 

3. 'புலித் தோல் போர்த்திய பசு' என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

விடை

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

 

திருக்குறனைச் சீர்பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரெ ன்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

விடை

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்.

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.

விடை

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.

 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்,

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

2. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

 

சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

யாழ்கோடு அன்ன கொளல் களைகொடிது

வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.

விடை

கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்.

 

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.


1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று.

2. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து.

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை