Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | திரவத்தில் திரவத்தை கொண்ட இருகூறுக்கரைசலின் ஆவி அழுத்தம்

11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள்

திரவத்தில் திரவத்தை கொண்ட இருகூறுக்கரைசலின் ஆவி அழுத்தம்

தற்போது ஒரு மூடிய கலனில், ‘A' எனும் திரவ கரைபொருளை, ‘B' எனும் தூய கரைப்பானில் கரைத்து, இருகூறுக்கரைசல் தயாரிக்கப்படுதலைக் கருதுவோம்.

திரவத்தில் திரவத்தை கொண்ட இருகூறுக்கரைசலின் ஆவி அழுத்தம் .

தற்போது ஒரு மூடிய கலனில், ‘A' எனும் திரவ கரைபொருளை, ‘B' எனும் தூய கரைப்பானில் கரைத்து, இருகூறுக்கரைசல் தயாரிக்கப்படுதலைக் கருதுவோம். கரைசலில் உள்ள A மற்றும் B ஆகிய இரண்டு கூறுகளும் ஆவியாகக் கூடியவை, மேலும் A மற்றும் B ஆகிய கூறுகளின், திரவ மற்றும் ஆவி நிலைமைகளுக்கிடையே ஒரு சமநிலை உருவாக்கப்படும். ரௌலட் எனும் பிரான்சு வேதியியலாளர், A மற்றும் B ஆகிய கூறுகளின் பகுதி அழுத்தங்கள் மற்றும் அவற்றின் மோல் பின்னங்களுக்கிடையேயான ஒரு அளவியலான தொடர்பை முன்மொழிந்தார். அது ரௌல்ட் விதி என அறியப்படுகிறது.

ரௌல்ட் விதிப்படிஎளிதில் ஆவியாகும் திரவங்களைக் கொண்ட கரைசல்களில், கரைசலிலுள்ள ஒவ்வொரு கூறின் (A & B) பகுதி ஆவிஅழுத்தமும், அவற்றின் மோல் பின்னத்துடன் நேர் விகிதத்திலிருக்கும்"

ரௌல்ட் விதிப்படி,

PAαXA   ...... (9.3)

PA = k xA

when xA = 1, எனும் போது k = p°A

இங்குA என்பது அதே வெப்பநிலையில், தூயநிலையில் உள்ள கூறு A யின் ஆவி அழுத்தம்.

எனவே,

PA = p°A xA ....... (9.4)

இதே போல கூறு B க்கு

PB = p°B xB....... (9.5)

xA மற்றும் xB ஆகியன முறையே கூறுகள் A மற்றும் B ஆகியவற்றின் மோல் பின்னங்களாகும்.

டால்டனின் பகுதி அழுத்த விதிப்படி, ஒரு மூடிய கலனின் மொத்த அழுத்தமானது, அதிலுள்ள தனித்தனிக் கூறுகளின் பகுதி அழுத்தங்களின் கூடுதலுக்குச் சமமாக அமையும்.

ஆதலால்,

Pமொத்தம் = PA + PB  ------ (9.6)

சமன்பாடுகள் (9.4) மற்றும் (9.5)லிருந்து PA மற்றும் PB மதிப்புகளை மேற்காண் சமன்பாட்டில், பிரதியிட

Pமொத்தம் = xAA + xBB  ------ (9.7)

xA + xB = 1 அல்லது xA = 1 – xB என நாம் அறிவோம்.

ஆகையால்,

Pமொத்தம் = ( 1 – xB) P°A + xBB ------ (9.8)

Pமொத்தம் = P°A + xB (P°B - A )  ------ (9.9)

மேற்காண் சமன்பாடானது, y = mx+c வடிவிலுள்ள ஒரு நேர்க்கோட்டுச் சமன்பாடாகும். xB க்கு எதிராக (Pமொத்தம்) ஐக் கொண்டு வரையப்படும் வரைபடமானது, (P°B - A ) சாய்வாகவும், P°A y -அச்சு வெட்டாகவும் கொண்ட ஒரு நேர்க்கோட்டைத் தரும்.

டொலுயீன் (கரைபொருள்) மற்றும் பென்சீனைக் (கரைப்பான்) கொண்ட ஒரு திரவக் கரைசலை கருதுவோம். மோல் பின்னங்களைப் பொருத்து, தூய பென்சீன் மற்றும் டொலுயீன் ஆகியவற்றின் ஆவி அழுத்தங்களின் மாறுபாடு வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


தூய டொலுயீன் மற்றும் தூய பென்சீன் ஆகியவற்றின் ஆவி அழுத்தங்கள் முறையே 22.3 மற்றும் 74.7 mmHg ஆகும். ஒரு கூறின் மோல் பின்னம் அதிகரிக்கும்போது, அத்தூய கூறின் பகுதி ஆவி அழுத்தமானது நேர்க்கோட்டில் அதிகரிக்கிறது என்பதை, மேலே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் காட்டுகிறது. கரைபொருள் மற்றும் கரைப்பானின் எந்த ஒரு இயைபிலும், மொத்த ஆவி அழுத்தமதிப்பை பின்வரும் நேர்க்கோட்டுச் சமன்பாடு (சிவப்பு கோட்டால் குறிப்பிடப்பட்டுள்ளது) தருகிறது.

Pகரைசல் = P°டொலுயீன் + Xபென்சீன் (P°பென்சீன் - P°டொலுயீன்) -- (9.10)


11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள்