Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | தொகுப்புச் சுற்றுகளைப் பயன்படுத்தி தர்க்க வாயில்களின் உண்மை அட்டவணைகளைச் சரிபார்த்தல்

இயற்பியல் செய்முறை பரிசோதனை - தொகுப்புச் சுற்றுகளைப் பயன்படுத்தி தர்க்க வாயில்களின் உண்மை அட்டவணைகளைச் சரிபார்த்தல் | 12th Physics : Practical

12 வது இயற்பியல் : செய்முறை

தொகுப்புச் சுற்றுகளைப் பயன்படுத்தி தர்க்க வாயில்களின் உண்மை அட்டவணைகளைச் சரிபார்த்தல்

தொகுப்புச் சுற்றுகளைப் பயன்படுத்தி AND, OR, NOT, EX - OR, NAND மற்றும் NOR ஆகிய தர்க்க வாயில்களின் உண்மை அட்டவணைகளைச் சரிபார்த்தல்.

தொகுப்புச் சுற்றுகளைப் பயன்படுத்தி தர்க்க வாயில்களின் உண்மை அட்டவணைகளைச் சரிபார்த்தல்


நோக்கம்

தொகுப்புச் சுற்றுகளைப் பயன்படுத்தி AND, OR, NOT, EX - OR, NAND மற்றும் NOR ஆகிய தர்க்க வாயில்களின் உண்மை அட்டவணைகளைச் சரிபார்த்தல்.


தேவையான கருவிகள் 

AND வாயில் (IC 7408), OR வாயில் (IC 7432), NOT வாயில் (IC 7404), EX- OR வாயில் (IC 7486), NAND வாயில் (IC 7400), NOR வாயில் (IC 7402), மின்மூலம், இலக்க தொகுப்புச்சுற்று பயிற்சிக் கருவி (Digital IC trainer kit) மற்றும் இணைப்புக் கம்பிகள்.


பூலியன் சமன்பாடுகள்


மின்சுற்று

IC மின்முனைகள் அடையாளம் காணல்


குறிப்பு

தொகுப்புச் சுற்றினை மின்சுற்றுப் பலகையில் நுழைக்கும் போது, அதன் அடையாள வெட்டு இடது புறமாக இருக்க வேண்டும். பின்னர் படத்தில் உள்ளவாறு IC மின்முனைகள் (IC pins) எண்ணப்பட வேண்டும். பின்வரும் படங்களில் உள்ள அனைத்து தொகுப்புச் சுற்றுகளுக்கும் மேற்கூறியவாறே, IC மின்முனைகள் அடையாளம் காணப்படுகின்றன.







செய்முறை

• கொடுக்கப்பட்ட தர்க்க வாயிலின் உண்மை அட்டவணையைச் சரிபார்ப்பதற்கு, உரிய தொகுப்புச்சுற்றினை எடுத்துக் கொண்டு மின்சுற்றில் உள்ளவாறு இணைப்புகள் தரப்படுகிறது.

• அனைத்து தொகுப்புச்சுற்றுகளுக்கும், 14 ஆம் IC மின்முனைக்கு 5V மின்னழுத்த வேறுபாடும், 7ஆம் IC மின்முனைக்கு புவி இணைப்பும் (Earthing) தரப்படுகிறது. 

• உண்மை அட்டவணையில் உள்ள உள்ளீடுகளின் சேர்க்கைகளுக்கு, அதற்குரிய வெளியீடுகள்குறிக்கப்பட்டு, அட்டவணைப் படுத்தப்படுகிறது.

• இந்த வகையில், அனைத்து தர்க்க வாயில்களின் உண்மை அட்டவணைகளும் சரி பார்க்கப்படுகின்றன.


முடிவு

தொகுப்புச் சுற்றுகளை பயன்படுத்தி AND, OR, NOT, EX - OR, NAND மற்றும் NOR ஆகிய தர்க்க வாயில்களின் உண்மை அட்டவனைகள் சரிபார்க்கப்பட்டன.


முன்னெச்சரிக்கைகள்

• VCE மற்றும் புவி இணைப்புகளை மாற்றி இணைத்தல் கூடாது. அவ்வாறு செய்தால் தொகுப்புச் சுற்றுகள் பழுதடைந்து விடும்.

• NOR தர்க்க வாயிலின் IC மின்முனை வரைபடமானது, மற்ற தர்க்க வாயில்களின் வரைபடங்களில் இருந்து வேறுபட்டது ஆகும்.

12 வது இயற்பியல் : செய்முறை