அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நீர் | 8th Science : Chapter 13 : Water

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர்

நீர்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ நீரின் முக்கியத்துவம், பண்புகள் மற்றும் பயன்களைப் புரிந்துகொள்ளல். ❖ நீரின் வேதிவினைகளுக்கான வேதிச் சமன்பாடுகளை எழுநகல். ❖ நீரை தூய்மைப்படுத்தும் முறைகளை விளக்குதல். ❖ கடின நீரை மென்னீராக மாற்றும் பல்வேறு முறைகளைப் பற்றி கலந்துரையாடல். ❖ நீர் மாசுபாட்டிற்கான காரணிகள் மற்றும் நீர்மாசுபாட்டின் விளைவுகளைத் தெரிந்துகொள்ளல். ❖ நீர் மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வரிசைப்படுத்துதல்.

அலகு 13

நீர்



 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

நீரின் முக்கியத்துவம், பண்புகள் மற்றும் பயன்களைப் புரிந்துகொள்ளல்.

நீரின் வேதிவினைகளுக்கான வேதிச் சமன்பாடுகளை எழுநகல்.

நீரை தூய்மைப்படுத்தும் முறைகளை விளக்குதல்.

கடின நீரை மென்னீராக மாற்றும் பல்வேறு முறைகளைப் பற்றி கலந்துரையாடல்.

நீர் மாசுபாட்டிற்கான காரணிகள் மற்றும் நீர்மாசுபாட்டின் விளைவுகளைத் தெரிந்துகொள்ளல்.

நீர் மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வரிசைப்படுத்துதல்.



 

அறிமுகம்

நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் 

வான்இன்று அமையாது ஒழுக்கு -குறள்

நீர் இல்லையெனில், பூமியல் உயிர்களே இருக்காது என்று திருக்குறள் கூறுகிறது. பிற உயிரினங்களைப் போலவே உயிர் வாழ நமக்கு நீர் அவசியமாக உள்ளது. சமைத்தல், துவைத்தல், சுத்தம் செய்தல் மற்றும் பாசனம் போன்ற பல்வேறு செயல்களுக்கு நீர் நமக்கு இன்றியமையாததாக உள்ளது. ஆனால், பெருகிவரும் மக்கள் தொகையினாலும், வாழ்க்கைமுறை மாற்றங்களினாலும் தேவைகள் அதிகரித்து நீர்வளம் குறைந்துகொண்டே வருகிறது. நீர் மாசுபாட்டலும், பருவநிலை மாற்றங்கள் மழைப் பொழிவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவதாலும் நீர் விநியோகம் குறைத்துள்ளது. நம் வாழ்விற்காக நாம் அனைவரும் நீரையே நீரையே சார்ந்துள்ளோம். எனவே, நீரினைச் சேமிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இப்பாடத்தில் நீரின் வளங்கள், பண்புகள் மற்றும் பயன்களைப் பற்றியும், மாசுபடுதல், நீர் சுத்திகரிப்பு முறைகள் குறித்தும் நாம் காண்போம்.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர்