கணினியின் பாகங்கள் | பருவம் 2 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - கம்பியில்லா இணைப்புகள் | 6th Science : Term 2 Unit 7 : Parts of Computer
கம்பியில்லா இணைப்புகள்
கம்பியில்லா இணைப்புகள் என்பன, ஊடலை (Blue tooth) மற்றும் அருகலை
(Wi- Fi) வாயிலாக, இணைப்புவடம் ஏதுமின்றிக் கருவிகளைக் கணினியுடன் இணைப்பதாகும்.
1.ஊடலை (Bluetooth)
ஊடலை மூலம் சுட்டி, விசைப்பலகை ஆகியவற்றைக் கணினியுடன் இணைக்கலாம்.
அருகில் உள்ள தரவுகளைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும்.

2. அருகலை (Wi-Fi)
இணைய வசதியை இணைப்புவடம் இல்லாமல் பெறவும், தரவுகளைப் பரிமாறிக்கொள்ளவும்
அருகலை பயன்படுகிறது.
