Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | p தொகுதி தனிமங்கள் - II : சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் - p தொகுதி தனிமங்கள் - II : சரியான விடையைத் தேர்வு செய்க | 12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : p தொகுதி தனிமங்கள் - II

p தொகுதி தனிமங்கள் - II : சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் : p தொகுதி தனிமங்கள் - II : சரியான விடைகளுக்கான பதில்கள், தீர்வு மற்றும் விளக்கம்

வேதியியல் : p தொகுதி தனிமங்கள் -  II

I. சரியான விடையைத் தேர்வு செய்க 


1. பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப் படவில்லை ? 

அ) நெஸ்லர் காரணி  

ஆ) IV ம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு 

இ) III ம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு 

ஈ) டாலன்ஸ் வினைப்பொருள்

விடை: அ) நெஸ்லர் காரணி


2. நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது? 

அ) குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை உடைய தனிமம் 

ஆ) ஆக்சிஜனைக் காட்டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. 

இ) d - ஆர்பிட்டால்கள் உள்ளன. 

ஈ) தன்னுடன் pπ – pπ பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. 

விடை: ஈ) தன்னுடன் pπ – pπ பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. 


3. தனிம வரிசை அட்டவணையில், 15 ம் தொகுதி 3 -ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு 

அ) 1s2 2s2 2p4 

ஆ) 1S2 2S2 2p3 

இ) 1s2 2s2 2p6 3s2 3p2 

ஈ) 1S2 2S2 2p63S2 3p3

விடை : ஈ) 1s2 2s2 2p6 3s2 3p3 


4. (A) என்ற திண்மம் நீர்த்த வலிமைமிகு NaOH கரைசலுடன் வினைபுரிந்து அருவருக்கத்தக்க மணமுடைய வாயு B ஐத் தருகிறது (B) யானது காற்றில் தன்னிச்சையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B) முறையே 

அ) P4 (சிவப்பு) மற்றும் PH3 

ஆ) P4 (வெண்மை ) மற்றும் PH3

இ) S8 மற்றும் H2S 

ஈ) P4(வெண்மை ) மற்றும் H2S

விடை: ஆ) P4(வெண்மை ) மற்றும் H2S


5. பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது 

அ) NO மற்றும் NO2 கலவை 

ஆ) நைட்ரசோ ஃபெர்ரஸ் சல்பேட் 

இ) பெர்ரஸ் நைட்ரேட் 

ஈ) பெர்ரிக் நைட்ரேட்

விடை: ஆ) நைட்ரசோ ஃபெர்ரஸ் சல்பேட் 


6. PCl3, ன் நீராற்பகுப்பினால் உருவாவது 

அ) H3PO3

ஆ) PH3

இ) H3PO4 

ஈ) POCI3

விடை : அ) H3PO3


7. P4O6ஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது 

அ) H3PO3

ஆ) H4P2O7 

இ) HPO3 

ஈ) H3PO4

விடை : அ) H3PO3


8. பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம் 

அ) 4 

ஆ) 2 

இ) 3 

ஈ) 5 

விடை : ஆ) 2


9. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி 

அ) 6N 

ஆ) 4N 

இ) 2N 

ஈ) இவை எதுவுமில்லை 

விடை: அ) 6N 

நார்மாலிட்டி = M x காரத்துவம் = 2x 3 = 6


10. கூற்று : குளோரின் வாயுவைக் காட்டிலும் ஃபுளுரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம். காரணம் : குளோரினானது, புளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு விசையினைப் பெற்றுள்ளது. 

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும். 

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல. 

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு. 

விடை: ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு


11.  பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது? 

அ) Cl2 

ஆ) F2 

இ) Br2 

ஈ) I2

விடை : ஆ) F2


12. ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத் தன்மையின் சரியான வரிசை எது?

அ) HI > HBr > HCl > HF 

ஆ) HF> HCl > HBr > HI

இ) HCl > HF> HBr > HI 

ஈ) HI> HCl> HF> HBr

விடை: ஆ) HF> HCl> HBr> HI 


13.  பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது? 

அ) XeOF4 

ஆ) XeO3 

இ) XeF2 

ஈ) NeF2

விடை : ஈ) NeF2 


14. மிக எளிதாக திரவமாக்க இயலும் வாயு எது?

அ) Ar 

ஆ) Ne 

இ) He 

ஈ) Kr 

விடை : இ) He


15. XeF6 ன் முழுமையான நீராற் பகுப்பினால் உருவாவது 

அ) XeOF4 

ஆ) XeO2F2 

இ) XeO3 

ஈ) XeO2

விடை: இ) XeO3 


16. சல்பைட் அயனியானது அயோடினால் ஆக்சிஜ னேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்ற மடைகிறது? 

அ) S4O6 2– 

ஆ) S2O6 2– 

இ) SO42- 

ஈ) SO32-

விடை: இ) SO42-


17. பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது? 

அ) HI 

ஆ) HF 

இ) HBr 

ஈ) HCl

விடை: அ) HI 

காரணம்: H-I பிணைப்பு வலிமை குறைந்தது. எனவே HI அமிலம் வலிமையானது. 


18. ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது? (NEET) 

அ) Br2 >I2> F2 >Cl2 

ஆ) F2 > Cl2 > Br2>I2 

இ) I2> Br2> Cl2>F2 

ஈ) Cl2> Br2 > F2>I2

விடை : ஈ) Cl2> Br2 > F2>I2


19. அமிலத் தன்மையைப் பொறுத்து, பின் வருவனவற்றுள் சரியான வரிசை எது? (NEET) 

அ) HClO2 <HClO < HClO3 < HClO4 

ஆ) HClO4 <HClO2 < HCIO < HClO3 

இ) HClO3 < HClO4 < HClO2 < HClO

ஈ) HClO < HCIO2 < HClO3 < HClO4

விடை: ஈ) HClO < HCIO2 <HCIO3 < HCIO4


20. தாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது,

 அ) Cu (NO3)2 NO மற்றும் NO2 

ஆ) Cu (NO3)2 மற்றும் N2O 

இ) Cu (NO3) 2மற்றும் No2

ஈ) Cu (NO3) 2 மற்றும் NO

விடை: இ) Cu (NO3) 2மற்றும் No2


12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : p தொகுதி தனிமங்கள் - II