Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | இனக்குழு உறுப்புகளை அணுகுதல்

பைத்தான் - இனக்குழு உறுப்புகளை அணுகுதல் | 12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects

12 வது கணினி அறிவியல் : அலகு 10 : தமிழ் OOPS : பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

இனக்குழு உறுப்புகளை அணுகுதல்

இனக்குழு உறுப்புகளை (அதாவது இனக்குழு மாறி அல்லது வழிமுறை (செயற்கூறு)) புள்ளி செயற்குறி மூலம் அணுக முடியும்

இனக்குழு உறுப்புகளை அணுகுதல்

இனக்குழு உறுப்புகளை (அதாவது இனக்குழு மாறி அல்லது வழிமுறை (செயற்கூறு)) புள்ளி செயற்குறி மூலம் அணுக முடியும்.

தொடரியல்

Object_name . class_member

எடுத்துக்காட்டு 10.1 : இனக்குழுவை வரையறுத்து அதன் உறுப்பு மாறிகளை அணுகும் நிரல்

class Sample:

#class variables

x, y = 10, 20

S=Sample( )                                                   # class instantiation

print("Value of x = "', S.x)

print("Value of y = ", S.y)

print("Value of x and y = '', S.x+S.y)

வெளியீடு

Value of x = 10

Value of y = 20

Value of x and y = 30

மேலே உள்ள நிரலில் இனக்குழுவின் பெயர் sample இனக்குழுவிற்குள்ளே, X மற்றும் y மாறிகள் முறையே 10 மற்றும் 20 என்ற தொடக்க மதிப்புகளை இருத்துகிறது. இந்த இரண்டு மாறிகளும் இனக்குழு மாறிகள் அல்லது இனக்குழுவின் உறுப்பு மாறிகள் (member variable) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இனக்குழு சான்றுருவாக்கல் முறையில் இனக்குழுவின் உறுப்புகளை அணுகுவதற்கு S என்ற பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு print கூற்றுகள் இனக்குழுவின் மாறிகளான x மற்றும் y ன் மதிப்புகளை அச்சிடுகிறது. கடைசி print கூற்று இரண்டு இனக்குழு மாறிகளான X மற்றும் y மதிப்புகளின் கூட்டுத் தொகையை அச்சிடுகிறது.

12 வது கணினி அறிவியல் : அலகு 10 : தமிழ் OOPS : பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்