பைத்தான் - பொருள்களை உருவாக்குதல் | 12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects
பொருள்களை உருவாக்குதல்
இனக்குழு உருவாக்கப்பட்ட பின் அந்த இனக்குழுவின் பொருள் அல்லது
சான்றுரு உருவாக்கப்பட வேண்டும். பொருளை உருவாக்கும் இந்த முறைக்கு “சான்றுருவாக்கல்”
(instantiation) என்று பெயர்.
தொடரியல்
Object_name = class_name( )
குறிப்பு
இனக்குழு சான்றுருவாக்கல், செயற்கூறு குறியீட்டைப் பயன்படுத்து
கிறது. அதாவது, இனக்குழு பெயரானது அடைப்புக்குறியைக் கொண்டிருக்கும்.