சுற்றுச்சூழல் பொருளியல் - அமில மழை | 12th Economics : Chapter 10 : Environmental Economics

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 10 : சுற்றுச்சூழல் பொருளியல்

அமில மழை

காற்று மாசுவின் விளைவே அமில மழை ஆகும்.

அமில மழை (Acid Rain)


காற்று மாசுவின் விளைவே அமில மழை ஆகும். தொழிற்சாலைகள், வாகனங்கள் கொதிப்பான்கள் போன்றவை வெளியிடும் வாயுக்கள் வளிமண்டலத்தின் உள்ள நீர்த்துகள்களோடு இணையும் போது ஏற்படுகின்றது. இந்த வாயுக்கள் நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் சல்பர் டிரை ஆக்ஸைடு, தண்ணீரோடு கலக்கின்ற போது சல்பரஸ் அமிலம், நைட்ரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் போன்றவையாக மாறுகின்றது. இந்நிகழ்வுகள் எரிமலை வெடித்துச் சிதறும் போதும் எரிகுழம்புகளைக் கக்கும்போதும் இயற்கையிலேயும் ஏற்படும். தாவரங்கள், நீர்வாழ் உயிரனங்கள், கட்டமைப்புக்கள் அதிக அளவில் அமில மழையால் பாதிக்கப்படுகின்றது.


12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 10 : சுற்றுச்சூழல் பொருளியல்