சுற்றுச்சூழல் பொருளியல் - சூழல் அமைப்பு (Eco system) | 12th Economics : Chapter 10 : Environmental Economics
சூழல் அமைப்பு (Ecosystem)
ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகள் (தட்பவெப்ப நிலை, பூமி, மண், வளிமண்டலம், பருவநிலை) ஆகியவற்றிற்கிடையோன தொடர்பே சூழல் அமைப்பு எனப்படுகிறது. சூழல் அமைப்பு உயிர்க்கோளத்தின் அடிப்படையாகும். மேலும் அதுவே பூமியின் நலத்தை தீர்மானிப்பதாகும். சுருக்கமாக கூறின் உயிர்ச் சமூகமும், உயிரற்றவைகளும் கொண்டுள்ள தொடர்பே சூழல் அமைப்பு எனப்படுகிறது.
