Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | தொடர் மற்றும் இலக்கமுறை சைகைகள்

இலக்கமுறை எலக்ட்ரானியல் - தொடர் மற்றும் இலக்கமுறை சைகைகள் | 12th Physics : UNIT 10a : Semiconductor Electronics

12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல்

தொடர் மற்றும் இலக்கமுறை சைகைகள்

எலக்ட்ரானியலில் இரு வேறுபட்ட வகையான சைகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை (i) தொடர் மின் சைகைகள் மற்றும் (ii) இலக்கமுறை சைகைகள்.

இலக்கமுறை எலக்ட்ரானியல் (Digital Electronics)


தொடர் மற்றும் இலக்கமுறை சைகைகள்

எலக்ட்ரானியலில் இரு வேறுபட்ட வகையான சைகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை (i) தொடர் மின் சைகைகள் மற்றும் (ii) இலக்கமுறை சைகைகள். தொடர் மின் சைகையானது நேரத்தைப் பொருத்து, தொடர்ச்சியாக மாறுபடும் மின்னழுத்தம் அல்லது மின்னோட்டத்தைக் கொண்டது. அத்தகைய சைகைகள் திருத்தி சுற்றுகளிலும் மற்றும் டிரான்சிஸ்டர் பெருக்கிச் சுற்றுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இலக்கமுறை சைகைகள் மின்னழுத்தங்களின் தனித்தனி மதிப்புகள் மட்டுமே கொண்ட சைகைகள் ஆகும். இலக்கமுறைசைகைகளுக்கு இருநிலைகள் தேவை: இயக்கு மற்றும் நிறுத்து. இயக்கு ஒரு நிலையாகவும், நிறுத்து மற்றொரு நிலையாகவும் கருதப்படுகின்றன. இந்த இரு நிலைகளை உயர்நிலை (இயக்கு) அல்லது தாழ்நிலை (நிறுத்து) மற்றும் மூடிய நிலை (இயக்கு) அல்லது திறந்தநிலை (நிறுத்து) எனவும் வரையறுக்கலாம். பூலியன் இயற்கணிதத்தில், இந்த உயர் மற்றும் தாழ் நிலைகள் 1 அல்லது 0 என்ற இரும எண்களைப் பயன்படுத்தி வரையறுக்கப்படுகின்றன. நிலை 1 குறிப்பது : சுற்றின் இயக்க நிலை, உயர் மின்னழுத்தம், ஒரு மூடிய சாவி. அதுபோன்றே, நிலை ) குறிப்பது : சுற்றின் நிறுத்திய நிலை, தாழ் மின்னழுத்தம் அல்லது ஒரு திறந்த சுற்று.


நேர் மற்றும் எதிர் லாஜிக்

இலக்கமுறை அமைப்புகளில் இரு மின்னழுத்த மட்டங்கள் உள்ளன: 5 V (உயர்வு நிலை) மற்றும் OV (தாழ் நிலை). படம் 9.40 இல் காட்டியுள்ளவாறு, ஒரு நேர் லாஜிக் அமைப்பில் இரும எண் 1 ஆனது 5V ஐக் குறிக்கிறது மற்றும் 0 ஆனது 0 V ஐக் குறிக்கிறது. ஆனால் எதிர்லாஜிக் அமைப்பில், நிலை 1 ஆனது OV யும் மற்றும் நிலை 0 ஆனது 5 Vயும் குறிக்கின்றன.


படம் 9.40 (அ) நேர்மறை மற்றும் (ஆ ) எதிர்மறை லாஜிக்

12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல்