விலங்கு திசுக்கள் (Animal tissues)
செல்களின் அளவு, வடிவம் மற்றும் செயல் ஆகியவற்றின் அடிப்படையில் விலங்கு திசுக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு வகை அடிப்படை திசுக்கள் பிணைக்கப்பட்டு அல்லது ஒன்றுடன் ஒன்று இணைந்து நமது உடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவையாவன, எபிதீலியத் திசு (உறை), இணைப்புத் திசு (ஆதரவு) தசைத்திசு (இயக்கம்) மற்றும் நரம்புத் திசு (கட்டுப்பாடு). (படம் 3.1).
