அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Civics : Forms of Government and Democracy

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி.

1. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை?

விடை:

நவீன உலகில் மக்களாட்சி அரசாங்கங்கள் தழைத்தோங்கி, மேலாதிக்கம் செலுத்தும் வடிவமாக உள்ளது.

இதுவரை கடுமையான சவாலோ, போட்டியோ எதிர்கொள்ளப்படாத நிலையில் உலகெங்கும் மக்களாட்சி கடந்த நூறு ஆண்டுகளில் வளர்ந்து வருகிறது.

 இந்தியாவில் மக்களாட்சி எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்:

கல்வியறிவின்மை

வறுமை .

பாலினப்பாகுபாடு

பிராந்திய வாதம் (வட்டாரப் பாகுபாடு

சாதி, வகுப்பு, சமயப்பண்பாடு

ஊழல்

அரசியல் குற்றமயமாதல்

அரசியல் வன்முறை.

 

2. இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிபந்தனைகளை விளக்குக.

விடை:

ஏழைகள் மற்றும் எழுத்தறிவற்றோருக்கு மக்களாட்சியின் பலன்களைக் கிடைக்கச் செய்ய அதிகாரம் அளித்தல்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது அதிகாரத்தையும், பொதுச் சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.

மக்களாட்சி முறையைப் பீடித்திருக்கும் சமூக தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் ஒழித்தல்.

மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கப் பாரபட்சமற்ற, திறமைமிக்க ஊடகங்களின் தேவையை உணர்தல்.

பொதுமக்களின் கருத்து வலுவாக இருத்தல்.

மக்களிடையே சகிப்புத்தன்மையும், மத நல்லிணக்கமும் நிலவுதல்.

அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்துதல்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.

வலுவான பொறுப்புமிக்க எதிர்க்கட்சி இருத்தல்.

 

3. இந்தியாவில் மக்களாட்சி பற்றிய உங்களது கருத்து என்ன?

விடை:

இந்தியாவின் மக்களாட்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்ற ஆட்சி முறையாகும்.

நாட்டிற்குத் தேவையான கூட்டங்களை உருவாக்குகின்ற இந்திய நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கிய கூறுகள். 1. கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்குபெறுதல், 2. ஒப்பிதல் அளித்தல்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு ஆகிய 5 முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.

சாதி, சமய, சினம், பால், கல்வித்தகுதி பாகுபாடு இன்று 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் சமமான வாக்குரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி