குடிமையியல் - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | 9th Social Science : Civics : Forms of Government and Democracy
குடிமையியல்
அலகு 1
அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

கற்றல் நோக்கங்கள்
❖ அரசாங்க அமைப்புகளைப் பற்றி அறிதல்
❖ மக்களாட்சியின் பொருளைப் புரிதல்
❖ மக்களாட்சியின் நிறைகள், குறைகள் பற்றி அறிதல்
❖ இந்திய மக்களாட்சி எதிர்கொள்ளும் சவால்களை அறிதல்
அறிமுகம்
உலகின் பல நாடுகள் பல்வேறு வகையான அரசாங்க அமைப்புகளை பின்பற்றி வந்தாலும், இன்றைய உலகம் மக்களாட்சியையே பெரிதும் விரும்புகிறது. உலகளவில் அரசாங்க அமைப்புகள் எவ்வாறு வளர்ச்சியடைந்து இருக்கிறது என்பது பற்றி இப்பாடத்தின் மூலம் கற்றறிவோம்.